இராமநாதபுரம்
எஸ் டி பி ஐ கட்சி சார்பில் வக்ஃப் உரிமை மீட்பு பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்

எஸ் டி பி ஐ கட்சி சார்பில் வக்ஃப் உரிமை மீட்பு பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி நகர் எஸ் டி பி ஐ கட்சி சார்பில் வருகின்ற 03/08/2025 அன்று மாலை 5:00 மணியளவில் நடைபெறவுள்ள வக்ஃப் உரிமை மீட்பு பொதுக்கூட்டத்தில் , மக்களை அழைக்கும் முகமாக, எஸ் டி பி ஐ கட்சி கமுதி நகர் தலைவர் அல்லா பிச்சை தலைமையில் நகர் செயலாளர் சேக் முஹம்மது, முன்னாள் நகர் செயலாளர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் ஜமாஅத் நிர்வாகங்களுக்கு அழைப்பிதழ் வழங்கி வருகின்றனர்.
வக்பு திருத்த சட்டத்திற்கு எதிரான, எஸ் டி பி ஐ கட்சியின் வக்ஃப் உரிமை மீட்பு பிரச்சார இயக்கத்திற்கு ஜமாஅத் நிர்வாகிகள் பொதுமக்கள் அமோக ஆதரவளித்து வருகின்றனர்,ஜமாஅத் தலைவர்களை அழைக்கும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




