அமைச்சரின் உதவியாளர் மீது தாக்குதல்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அமைச்சரின் அலுவலக உதவியாளர் மீது திமுக நிர்வாகிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர்,தமிழக வனத்துறை மற்றும் கதர் கிராம வாரிய தொழில்கள் துறை அமைச்சர் ஆர், எஸ், ராஜகண்ணப்பன் அலுவலகத்தில் உத வியாளராக கன்னிராஜபுரம் ரோஜ்மா நகரைச் சேர்ந்த டோனி, வயது, 35, பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் முதுகுளத்தூர் தனியார் மண்டபத்தில் ஓரணியில் தமிழ்நாடு திட்ட ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சரின் அலுவலக உதவியாளர் டோனி மீது திமுக நிர்வாகிகளே தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில்
விரைவாக பரவியது. மேலும் டோனி காயங்களுடன் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் குறித்து காவல் இச்சம்பவம் முதுகுளத்தூர் நிலையத்தில் டோனி கொடுத்த புகாரின் பேரில் மண்டபத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். இதில் டோனியை மாயகிருஷ்ணன் மற்றும் முரளிதரன் ஆகிய இருவரும் தாக்குதல் நடத்தியது தெரியவந்தது.

இதனையடுத்து மாயகிருஷ்ணன் மற்றும் முரளிதரன் ஆகியோர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
இதை போல முரளிதரன் கொடுத்த புகாரின் பேரில் டோனி மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.




