இராமநாதபுரம்

விருப்ப மனு

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி 2026 தேர்தலில் போட்டியிட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் நிர்வாகிகள் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகன் தலைமையில் சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் தங்களின் விருப்ப மனுக்களை ஏராளமானோர் நேரில் வழங்கினர்.

அதன்படி மாவட்ட அவைத்தலைவர் ராமச்சந்திரன், மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு மகளிர் அணி செயலாளர் ஜெசிமா பானு, டாக்டர் பன்னீர் செல்வம், முதுகுளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் புளியங்குடி முத்துராமலிங்கம், முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணக்குமார், கடலாடி ஒன்றிய செயலாளர் வெள்ளத்துரை, சாயல்குடி நகர் செயலாளர் சரிபு, கமுதி நகர் செயலாளர் மோகன்பாலன், கடலாடி ஒன்றிய செயலாளர் பாண்டி, வழக்கறிஞர்ஜோதி முருகன், முருகவேல், கீழத்தூவல் சத்தியமூர்த்தி, யோகநாதன், சாயல்குடி ஒன்றிய செயலாளர் பச்சக்கண்ணு, மாவட்ட நிர்வாகி கார்த்தி, அபிராமம் குமணன், (பரமக்குடி சட்டமன்ற தொகுதி ) மாவட்ட பொருளாளர் முனியசாமி, மாவட்ட மாணவர் அணி செயலாளர் அழகர்சாமி, பாலமுருகன், கமலதாசன், சபரிநாதன், மற்றும் நிர்வாகிகள் தொடர்ந்து விருப்பமனு வழங்கி வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button