கவிதைகள் (All)
உன்விழி பேசும்வார்த்தையை


உன்
விழி பேசும்
வார்த்தையை.
உணர்ந்திட்ட
உன்
புருவம்
உன்
பருவமேனியை
பதப்படுத்தி உள்ளதோ.
கவிதைக்கான
கருக்களை
உன்
கன்னத்தில் புதைத்து
என்
எண்ணத்தில்
விளையாடுவது
ஏனோ.?
உன்
இதழில் வழிகிறது
இதமான
தமிழ்
இன்பத்தின் ஊற்றாய்.
புன்முருவல்
காட்டும்
புன்னகைப்பூவே…
உன்
உள்ளத்தின்
மகிழ்ச்சி
உன் உதட்டின்
வழியே
வழிந்தோட
வாய்ப்புத்தேடி நிற்கின்றது.
திறந்து விடு
உன்
புன்னகையை.
திக்கற்று நிற்கும் வாலிபர்களுக்காக…
அரும்புக்கவி…