கவிதைகள் (All)
இதயம்…

இதயம்…
இரவுத்தோறும் அழுகிறது
பகல்தோறும் ஏங்குது..
உறவிலே தூக்கம்
உணர்வில் ஏக்கம்…!
மழையிலே கவிதை
மனதில் அருவி..
நினைப்பிலே இனிமை
நிலவோடு காதல்..!
வசந்தத்தில் வந்து
மஞ்சத்தை வென்று..
வஞ்சத்தில் வீழ்த்தி
வன்மத்தில் தள்ளி…!
கொங்கை காட்டி
மங்கையாய் வென்று..
அங்கத்தை இழந்து
தங்கத்தேடி போய்…!
மனதிலே வாழும்
மகாராசி நீயே..
கல்லறையில் துயிலும்
காதலியே வருவேன்…!
உன்னை நினைந்து
உலகினை மணந்து…
உறவென வளர்ந்து
உயிரென கிடந்து…!
மண்ணில் உன்னை
விதைத்து அழுதேன்..
மலரென எழுந்து
மணமென விரிந்து…!
என்னை ஆளும்
இனிமை அழகே..
என்று ஏனது
பயணம் சொல்வாயா…!!
வீரகனூர் ஆ. இரவிச்சந்திரன் சேலம்..

