கவிதைகள் (All)

என்றும் வாழ்வார் !

என்றும் வாழ்வார் !

  • பால் நிலவன்

( காஞ்சி அப்துல் ரவூப் பாகவி )

  1. அதிர்ந்தென்றும் பேசாத தென்றல் பேச்சு !

அடக்கத்தின் உருவம் ! நற் பண்பே மூச்சு !

பதிக்கின்ற பார்வையிலே மிளிரும் ஞானம் !

பார்ப்பவரைத் துல்லியமாய் அளக்கும் ஆழம்!

முதியவர்கள் தமைக் கண்டால் முகம் மலர்ந்து

முகமனுடன் மரியாதை செய்யும் சீலம் !

புதியவர்களைக் கூட புன்ன கையால்

பொலிவாக்கும் நற்பெருமான் சலாஹூ த்தினார் !

  • பொற்குவியல் பல கோடி பெற்றி ருந்தும்

பொறுமையுடன் பணிவு கொளும் பெருமனத்தார் !

தற்பெருமை கொள்ளாமல் தணிவு காட்டித்

தளும்பாத நிறைகுடத்துத் தன்மை கொண்டார் !

கொற்றவனின் மேல் பூண்ட அன்பால் பிறரின்

குறைமறந்து மன்னித்தே அரவணைப்பார் !

மற்றெதிலும் அவர் பற்று கொண்டாரில்லை !

மாபெரியோன் பண்பதனைப் பற்றிக் கொண்டார் !

  • சாதிமதம் பாராமல் அனைவ ருக்கும்

சரிசமமாய் நன்மை செயும் மனித நேயர் !

மூதறிஞர் தமைக் கண்டால் முனைந்து சென்று

முறையுடனே பெருமை செயும் தகைமையாளர் !

காதும் காதும் வைத்தாற் போலே ஏழ்மைக்

கனலுக்குள் வீழ்ந்தவரை கைகொடுத்து

ஆதரிக்கும் நல்லிதயத் தூய்மை கொண்டார்,

அறவாழ்வை நேசிக்கும் சலாஹு த்தீனார் !

  • உதவியென வந்தோர் மனம் குளிர்ந்து வாழ்த்த

உள்ளபடி முடிந்தவரை உதவி செய்வார் !

பதவியினால் கர்வமர் கொண்டாரில்லை !

பணிவுதனை அணிகலனாய் ஆக்கிக் கொண்டார் !

வதனமெலாம் நல்லுணர்வாய் வடிவம் கொண்டே

வையத்தார் அனைவர்க்கும் நலமே நாடும்

மதுரகுண சான்றோராம் சலாஹு த்தீனார்

வல்லவனின் நல்லருளால் என்றும் வாழ்வார் !

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button