கடையநல்லூரில் தமிழக அரசு தலைமை காஜி மறைவிற்கு இரங்கல் கூட்டம்

கடையநல்லூரில் தமிழக அரசு தலைமை காஜி மறைவிற்கு இரங்கல் கூட்டம்

கடையநல்லூர் :
தென்காசி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் 29/05/2025 அன்று பைஜுல் அன்வார் அரபிக் கல்லூரியில் மறைந்த தமிழக அரசின் தலைமை காஜி மவ்லானா முஹம்மது சலாஹுத்தீன் அய்யூப் ஹழ்ரத் மறைவிற்கு நினைவேந்தல் மற்றும் ஈஸால் ஸவாப் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் மவ்லானா ஏ.ஓய் முஹ்யித்தீன் பைஜி ஹழ்ரத் தலைமை தாங்கினார். பைஜுல் அன்வார் அரபிக் கல்லூரி பேராசிரியர் மவ்லானா ஜாஹிர் ஹுசைன் பைஜி வரவேற்புரை ஆற்றினார்.
தென்காசி மாவட்ட துணைச் செயலாளர் மவ்லானா ஷாகுல் ஹமீது வாஹிதி, தென்காசி வட்டாரச் செயலாளர் மவ்லானா ஷம்சுத்தீன் பைஜி, சுரண்டை வட்டாரச் செயலாளர் மவ்லானா ஷாகுல் ஹமீது பைஜி, புளியங்குடி – வாசுதேவநல்லூர் வட்டார பொருளாளர் மவ்லானா மீராஸா மன்பஈ, செங்கோட்டை வட்டார பொருளாளர் மவ்லானா சர்தார் முஹ்யித்தீன் பைஜி, கடையநல்லூர் வட்டார செயலாளர் மவ்லானா செய்யது இப்ராஹீம் அன்வாரி ஆகியோர் தலைமை காஜி மாண்புகளை எடுத்துரைத்தனர். இறுதியாக மவ்லானா அஹ்மது மீரான் ரியாஜி ஹழ்ரத் துஆ ஓதினார்.
முன்னதாக பைஜுல் அன்வார் அரபிக் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள், வருகை தந்த ஆலிம்கள் அனைவரும் இணைந்து குர்ஆன் ஓதினார்கள். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மவ்லானா இத்ரீஸ் ஷாபி பைஜி ஹழ்ரத் முன்னின்று நடத்தினார். இந்நிகழ்வில் ஏராளமான ஆலிம்கள் கலந்து கொண்டனர்.




