இராமநாதபுரம்
சாயல்குடி : மூதாட்டி கொலை

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் காயம்பு கோவில் தெருவில் வசித்து வந்த ராஜம்மாள் என்ற மூதாட்டி, நள்ளிரவில் தனது வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்தபோது, மர்ம நபர்களால் கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்ப ஏற்படுத்தியுள்ளது. சாயல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.





