வழக்கறிஞர் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த ஜமாத் நிர்வாகம்..மதுரை உயர் நீதிமன்ற கிளை தாசில்தாருக்கு அதிரடி உத்தரவு

வழக்கறிஞர் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த ஜமாத் நிர்வாகம்..
மதுரை உயர் நீதிமன்ற கிளை தாசில்தாருக்கு அதிரடி உத்தரவு.

இராமநாதபுரம் மாவட்டம் Rs. மங்களம் தாலுகா சோழந்தூர் கிராமத்தில் வசிக்கும் வழக்கறிஞர் முகமது அப்துல்லா தன்னுடைய குடும்ப பிரச்சனை காரணமாக மாவட்ட நீதிமன்றதில் வழக்கு தொடுத்துள்ளார்.
இது ஊர் கட்டுப்பாட்டை மீறிய செயல் என்று வழக்கறிஞர் மற்றும் அவரின் சகோதரிகள் இருவர் என மொத்தம் நான்கு குடும்பத்தை சோழந்தூர் ஜமாத் நிர்வாகம் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தும் வரி வசூல் செய்யாமல் தனிமை படுத்தியத்தியுள்ளது.
இது சம்பந்தமாக வழக்கறிஞர் அப்துல்லா முதலமைச்சரின் தனிபிரிவு,மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர்,வட்டாச்சியர், தாசில்தார் உள்ளிட்டோருக்கு புகார் மனு செய்திருந்தார்.
இந்த புகார் மனு மீது மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் writ மனு தாக்கல் செய்திருந்தார், இந்த மனுவின் கீழ் நீதிமன்றம் Rs. மங்களம் தாசில்தாருக்கு ஒரு மாத காலத்திற்குள் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது




