கவிதைகள் (All)
பராபவ வருடப்பிறப்பு நல்வாழ்த்துக்கள்
பராபவ வருடப்பிறப்பு நல்வாழ்த்துக்கள். – 14.04.2026.
பரம் என்றால் உயர்ந்தது.
அபவம் என்றால் மாற்றத்தின் துவக்கம்.
பரமன் என்றால் உயர்ந்தவன்.
பரமாத்மா என்றால் உயர்ந்த ஆத்மா.
பரம சுகம் என்றால் உயர்ந்த ஆரோக்கியம்.
பரமானந்தம் என்றால் உயர்ந்த ஆனந்தம்.
பரமபதம் என்றால் இறைவனது உயர்ந்த திருவடி. – ஆக
பராபவம் என்றால் உயர்ந்த மாற்றத்தின் துவக்கம்.
இவ்வாண்டில்,
உள்ளத்திலும், இல்லத்திலும், உறவுகளிலும், நட்புகளிலும்,
உழவிலும், தொழிலிலும்,
கல்வியிலும், கலைகளிலும்,
பண்பாட்டிலும் , பகுத்தறிவிலும்
விளையாட்டிலும், விஞ்ஞானத்திலும் ,
அலுவலிலும் ,அரசியலிலும்,
அனைத்திலும் இப்புத்தாண்டில்
உயர்ந்த மாற்றங்கள் வரட்டும்.
உலகம் செழிக்கட்டும்,
உள்ளங்கள் நிறையட்டும்.
உற்சாகம் பொங்கட்டுமென
உளமாற வாழ்த்துகிறேன்.
அன்புடன்,
சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்.
