இராமநாதபுரம்

எஸ் டி பி ஐ கட்சி : கல்வி வளர்ச்சி கருத்தரங்கம் நடத்திட தீர்மானம்

எஸ் டி பி ஐ கட்சி மேற்கு மாவட்ட செயற்குழு மற்றும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15 அன்று கல்வி வளர்ச்சி கருத்தரங்கம் நடத்திட தீர்மானம்

எஸ் டி பி ஐ கட்சி இராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் சாயல்குடி நகர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் நூருல் அமீன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட பொதுச் செயலாளர் பாஞ்சுபீர் நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார்.
மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் போகலூர் செய்யது இப்றாகிம் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் மௌலவி மீரான் முஹைதீன் மன்பஈ வருகை தந்த அனைவரையும் வரவேற்றார்.இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர்கள் காஜா முஹைதீன் ,ராஜா முஹம்மது , மற்றும் கன்சுல் மஹரிபா, மாவட்ட பொருளாளர் செய்யது சதக்கத்துல்லா , மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேக் முஹம்மது, முதுகுளத்தூர் தொகுதி தலைவர் முஹம்மது ரபீக் , பரமக்குடி தொகுதி தலைவர் ரிஸ்வான்,மாவட்ட கல்வியாளர் அணி தலைவர் அண்ணல் முஹம்மது , முதுகுளத்தூர் தொகுதி செயலாளர் சத்தார் மைதீன் , SDTU மாவட்ட தலைவர் ரஷீத் கான் உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொன்டு சிறப்பித்தனர்.

மேலும் எஸ் டி பி ஐ கட்சியின் சார்பில் செயற்குழு கூட்டத்தின் நிறைவில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15 அன்று தமிழக கல்வி வளர்ச்சி தினமாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

அதனடிப்படையில் வருகின்ற 15/07/2025 அன்று SDPI கட்சி இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் சார்பில் கல்வியாளர்கள் மற்றும் அரசியல் ஆளுமைகள் கலந்து கொள்ளும் மாபெரும் கல்வி வளர்ச்சி கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
மேலும் கல்வி வளர்ச்சி கருத்தரங்கில் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு சிறப்பித்திட வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

சமீப காலமாக இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் சுற்றித்திரியும் வெறிநாய்களால் மக்கள் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். இது தொடர்பாக SDPI கட்சி சார்பில் பலமுறை கோரிக்கைகள் வைக்கப்பட்ட பின்பும் மாவட்ட நிர்வாகம் மேற்படி வெறிநாய்கள் விவகாரத்தில் அலட்சியப் போக்குடனேயே செயல்பட்டு வருகின்றது. மாவட்ட நிர்வாகம் மேற்படி வெறிநாய்களை அப்புறப்படுத்தும் விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்மாவட்ட செயற்குழு மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கின்றது.
நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் SDPI கட்சி சார்பில் , ஆகஸ்ட் மாதத்தில் வெறிநாய்களிடம் பாதுகாப்பு வேண்டி, மாவட்ட ஆட்சியரிடம் உயிர்ப்பிச்சை கேட்கும் போராட்டம் விரைவில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

ஊரக உள்ளாட்சி நிர்வாகங்களின் பதவிக் காலம் நிறைவுற்ற நிலையில், ஊரக உள்ளாட்சி மக்கள் நல பணிகள் தொய்வின்றி தொடர மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனமெடுத்திட வேண்டும் என மாவட்ட செயற்குழுவில் வலியுறுத்தினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button