உலகம்

இலங்கை : அட்டாளைச்சேனையில் விளையாட்டுக் கழகங்களுடன் சந்திப்பு

அட்டாளைச்சேனையில் விளையாட்டுக் கழகங்களுடன் சந்திப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

அட்டாளைச்சேனை விளையாட்டுக் கழக அங்கத்தவர்களுடனான சந்திப்பு நேற்று (24) வியாழக்கிழமை அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை ப்ரண்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தினரின் ஏற்பாட்டில்,  அவ்விளையாட்டுக் கழக அங்கத்தவர்களுடனான சந்திப்பும், அட்டாளைச்சேனை மார்க்ஸ் மென் விளையாட்டுக் கழகத்தினரின் ஏற்பாட்டில்,  அவ்விளையாட்டுக் கழக அங்கத்தவர்களுடனான சந்திப்பும் அந்தந்த கழகத் தலைவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வுகளில் திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச செயலகங்களின் அபிவிருத்தி குழு தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

மேலும் தேசிய மக்கள் சக்தியின் அட்டாளைச்சேனை பிரதேச அமைப்பாளர் ரியாஸ், அட்டாளைச்சேனை பிரதேச செயற்பாட்டாளர்கள்,  அட்டாளைச்சேனை பிரதேச சபை வேட்பாளர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து நிகழ்வுகளில் கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button