General News

முதுகுளத்தூர் – அபிராமம் இடையே குறுகிய ரோடால் விபத்து அபாயம்

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் – செல்வநாயகபுரம் வழியாக அபிராமத்திற்கு செல்லும் குறுகிய ரோடால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.முதுகுளத்தூரில் இருந்து செல்வநாயகபுரம், ஆணைசேரி, மணலூர் வழியாக அபிராமத்திற்கு இயக்கபட்ட அரசு பஸ் குறுகிய ரோடால், இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரத்து செய்யப்பட்டது.

தற்போது மினி பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. கனரக வாகனங்கள் எதிரேதிரே செல்ல முடியாமல், ஒரு கி.மீ., தூரம் பின்நோக்கி வந்து ஒதுங்கிய பின்னரே எதிரே வரும் வாகனம் செல்ல முடியும்.இதனால் பயண நேரம், எரிபொருள் செலவும் அதிகரிக்கிறது.இப்பிரச்னையால் வாடகை வாகனங்கள் கூட வருவதில்லை.

 

இதுகுறித்து மணலூர் முத்து கூறுகையில், “” குறுகிய ரோடால், இரவு நேரங்களில் பயணம் செய்வது சிரமம். விபத்து அபாயம் நீடிக்கிறது,” என்றார். 25 க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயன்பெறும் வகையில், குறுகிய ரோடை அகலபடுத்த, நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button