இராமநாதபுரம்
சி.சி.டி.வி. கேமரா இயக்கி வைப்பு

நெடுங்குளம் கிராமத்தில் கீழ்வைகை வடிநில கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு ஜீவானந்தம் கதிரேசன் தலைமையில் பரமக்குடி தாலுகா காவல் ஆய்வாளர் திரு மகேஷ் அவர்கள் CCTV camera வை இயக்கி வைத்தார்

இந்நிகழ்ச்சியில்
நெடுங்குளம் கிராம நிர்வாக அதிகாரி திரு முத்துகுமார்
ஊர்த்தலைவர் திரு நடராஜன் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர் .
காவல் ஆய்வாளர் திரு J மகேஷ் அவர்கள் பேசுகையில் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும் குற்ற வழக்குகளின் புலன் விசாரணையில் CCTV camera முக்கிய பங்காற்றுகிறது என்றும் ஆகவே ஒவ்வொரு கிராமத்திலும் CCTV camera வைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.



