தமிழ்நாடு
ஆங்கில இலக்கிய மன்ற நிறைவு விழா

ஆங்கில இலக்கிய மன்ற நிறைவு விழா

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, ஆராய்ச்சி ஆங்கிலத்துறை மற்றும் கல்லூரி உள் தர உறுதி செல் இணைந்து 11.04.2025 அன்று ஆங்கில இலக்கிய மன்ற நிறைவு விழா நடைபெற்றது. துறைத்தலைவர் சர்மிளா பானு வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். உதவிப்பேராசிரியை செய்யது அலி பாத்திமா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக பரமக்குடி, அரசு கல்லூரி, ஆங்கிலத்துறை, உதவிப்பேராசிரியர் செந்தில்முருகன் சிறப்புரையாற்றினார். நிகழ்வில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவி சுல்பிகா தக்சீன் நன்றி கூறினார்.




