இராமநாதபுரம்

கீழக்கரை நகர் எஸ் டி பி ஐ கட்சி நிர்வாகிகள் சட்டமன்ற உறுப்பினரை சந்தித்து மனு அளித்தனர்

கீழக்கரை நகர் எஸ் டி பி ஐ கட்சி நிர்வாகிகள் சட்டமன்ற உறுப்பினரை சந்தித்து மனு அளித்தனர்.

இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் அலுவலகத்தில் கீழக்கரை நகர் எஸ் டி பி ஐ கட்சி சார்பில் டிச,11 இன்று
நகர் நிர்வாகிகள் சந்தித்து கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட அடிப்படை தேவைகளை சரி செய்து தருமாறு மனு நகர தலைவர் ஜலீல் அவர்கள் தலைமையில் மனு அளித்தனர், அதில்
கீழக்கரையில் அரசு ஆணைப்படி மக்களுக்கு பயனுள்ள நூலகம் அமைக்க
,புதிய மீன் மார்க்கெட் கட்டிடத்தை விரைவாக கட்டித்தருதல்,
மெயின் ரோடு வள்ளல் சீதக்காதி பீசா பேக்கரி பகுதி ஹோட்டல்கள் மற்றும் பேக்கரி அதிகம் உள்ள ஏரியாக்கள் பகுதியில் கழிவு நீர் குழாய்களில் கழிவு நீர் ஓடி வருகிறது உணவுப் பொருட்களின் மீது கொசுக்கள் பரவி நோய்கள் பரவும் அபாயம் உள்ளது நிரந்தரமாக அந்த கழிவு நீர் குழாய்களில் பெரிய குழாய்கள் பதித்து அதனை நிரந்தர சரி செய்ய வேண்டியும்
ஜும்மா பள்ளி பின்புறம்உள்ள கழிவுநீர் பிரச்சினைகளை விரைந்து நிரந்தர சரி செய்யவும்,புதிய பேருந்து நிலையம் செல்லும் பாதையை புதுப்பித்து தருதல்,
கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதி முழுவதும்) ஊர் முழுவதும் தரமான வாருகால் மூடி அமைத்து தருதல்,
தில்லையேந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட 500 பிளாட் பகுதியில் ரேஷன் கடை அமைத்துத் தரவும் ஆகிய 6 கோரிக்கைகளை கீழக்கரை அனைத்து சமூக மக்களுக்காக செய்து தர வேண்டும் என்று கீழக்கரை நகர் எஸ் டி பி ஐ கட்சியின் சார்பாக கேட்டுக்கொண்டனர், மேலும் சட்டமன்ற உறுப்பினர் அனைத்து கோரிக்கைகளையும் விரைவில் சரி செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார்,இந்நிகழ்வில் நகர் செயலாளர் கீழை அஸ்ரப் , நகர் பொருளாளர் கலீல் ரகுமான், இணைச் செயலாளர் பாரூக் ராஜா முஹம்மது, நகர் செயற்குழு உறுப்பினர்கள் அகமது நதீர் , தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சாதிக் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button