1. Home
  2. சிந்தனை

Tag: சிந்தனை

ஏ.ஆா்.தாஹாவின் சிந்தனை அரும்புகள்

ஏ.ஆா்.தாஹாவின் சிந்தனை அரும்புகள் ———————————————————— சஞ்சலத்தில் ஆழ்த்தும் ஷைத்தான் ———————————————————— “ஏனோ தானோ வென்று தொழுவோரை……. எளிதில் ஷைத்தான் கெடுக்கிறான்”…… “எத்தனை ரக்க அத்துகள் தொழுதோ மென்ற எண்ணிக்கையில் குழப்பம் கொடுக்கிறான்”……. ஆம்…உண்மைதான்.நான்கு ரக்கஅத் தொழுகைகளில், எத்தனை ரக்கஅத் தொழுதோம் என்ற சிறிய சந்தேகம், தனியாகத் தொழும் போதும்…

சுயமான சிந்தனையே ஆராய்ச்சியின் அடித்தளம்

2018 – ஆம் ஆண்டு தொடக்கத்தில் எழுதப்பட்ட கட்டுரை.. மீண்டும் உங்கள் முன் சுயமான சிந்தனையே ஆராய்ச்சியின் அடித்தளம் பேராசிரியர் கே. ராஜு டாக்டர் பி.எம்.ஹெக்டே மருத்துவர்களில் மிகவும் வித்தியாசமானவர். அலோபதி மருத்துவர் ஆனாலும் மருந்துக்கம்பெனிகள் அடிக்கும் கொள்ளைக்கும் தேவையான அளவுக்கு மேல் மாத்திரைகளைப் பரிந்துரைப்பதற்கும் எதிராககட்டுரைகள் எழுதி சகமருத்துவர்களின் கடுப்பைச் சம்பாதித்து வருபவர். தன்னுடைய மாணவர் ஒருவரைப் பற்றி 2017டிசம்பர் 24 தேதியிட்ட ஆங்கில இந்து நாளிதழில் அவர் எழுதிய கட்டுரையில் ஆராய்ச்சி என்றால் என்ன என்பதைப் பற்றிஅற்புதமான விளக்கம் கொடுத்தார். “ஏற்கனவே தெரிந்த விஷயங்களை மீண்டும் திருப்பிச் சொல்வதால் அறிவு முன்னேறுவதில்லை.. மாறாக, மாற்றவேமுடியாது என நிலைபெற்றுவிட்ட சில தவறான கோட்பாடுகளை உடைத்தெறிவதன் மூலமே முன்னேறுகிறது எனமாணவர்களிடம் நான் கூறுவதுண்டு. எனது ஆயிரக்கணக்கான மாணவர்களில் அருணாச்சலம் குமார் அந்தபோதனையை சரியாகக்  கடைப்பிடிப்பவர். மணிபால் பல்கலைக்கழகத்தின் உடற்கூறியல் துறையில் அவர் ஓர் இளம்ஆசிரியராகச் சேர்ந்தார். மாணவர்கள் அவரை மிகவும் நேசித்தனர். ஆனால் எம்பிபிஎஸ் படித்தபோது சில தேர்வுகளில்பல முறை தோற்றதினால் அவரை படிப்பில் பின்தங்கிய ஒரு மாணவராகவே ஆசிரியர்கள் கருதினர்! காரணம், அவர்ஒரு சுயசிந்தனையாளர். தெரிந்த விஷயங்களை தேர்வுத்தாளில் அப்படியே எழுதி சமர்ப்பிப்பதில் அவருக்கு நாட்டம்இருக்காது. ஆனால் நமது கற்றல் முறை, நிதியுதவியைப் பெற்றுக் கொண்டு அதைத் தக்கவைத்துக் கொள்ளச்செய்யப்படும் வழக்கமான ஆராய்ச்சிகள், ஆராய்ச்சித் தாள்களை தயாரிக்கும் முறை, சான்றிதழ்களின் பட்டியல்கள் -இவைதான் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு தருவதற்கான அளவுகோல்கள். அதிகாரத்தில்இருப்பவர்களில் பெரும்பாலோருக்கு ஆராய்ச்சியைப் பற்றிய ஆழமான புரிதல் கிடையாது. பதவி உயர்வுகிடைக்காததைப் பற்றியெல்லாம் டாக்டர் குமார் கவலைப்படமாட்டார். அவருடைய அறிவுக்கூர்மையைக் கண்டறிந்துஅவருக்கு நான் பதவி உயர்வு அளித்தபோது சில அதிருப்திக் குரல்கள் எழுந்தன. தன்னுடைய தனிப்பட்டவாழ்க்கையிலும் திருமணத்திலும் குமார் பரவலாக ஏற்கப்பட்ட நடைமுறைகளின்படி நடந்து கொள்ளாதவர்.வாழ்க்கையை ஒரு சவாலாக ஏற்று அதைத் தைரியமாக சந்தித்தவர்” என்று தன் கட்டுரையைத் தொடங்குகிறார் டாக்டர்ஹெக்டே. ஒரு முறை அவர் ஹெக்டேயிடம் கிரிக்கெட்டில் சாதனை படைத்த சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய உடலுக்கேற்ற மட்டையைப் பயன்படுத்தாமல் மிகுந்த எடையுள்ள மட்டையைப் பயன்படுத்துவதாகக் கூறினார். டெண்டுல்கர்விளையாடுவதை டிவியில் பார்த்துவிட்டு ஆய்வு செய்த குமார் விரைவிலேயே அவருடைய முதுகுத் தசைகளில் பாதிப்புவரும் என்று கணித்தார். சில மாதங்களுக்குப் பிறகு சச்சினுக்கு உண்மையிலேயே முதுகுவலி வந்து படுத்தபடுக்கையானார். அவருடைய டாக்டர்கள் டெண்டுல்கருக்கு அளிக்க வேண்டிய சிகிச்சை பற்றி அறிந்து கொள்ள டாக்டர்குமாருடைய ஆய்வுத் தாளைப் பயன்படுத்திக் கொண்டார்களாம்! மங்களூரைச் சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகளில் ஏராளமான மீன்கள் செத்துக் கரையொதுங்குவதைக் கவனித்தடாக்டர் குமார் கடலின் ஆழப்பகுதியில் நிலநடுக்கம் போன்ற அதிர்வுகள் இருப்பதாகவும் அது சுனாமி வருவதில் போய்முடியும் என்றும் கணித்துக் கூறினார். அவருடைய ஆராய்ச்சி பெரிதும் பாராட்டப்பட்டது. ஒரு நோய்க்கு மருந்தென்று சொல்லி வெறும் இனிப்பு உருண்டைகளை டம்மியாகக் கொடுத்தபோது சில நோயாளிகள்குணமாகிவிட்டதாக உணர்ந்தார்கள் என்கிறது அண்மையில் செய்யப்பட்ட ஓர் ஆய்வு. ஆழ்மனதில் நம்பிக்கை தரும்இந்த                   உணர்வினை பிளேசிபோ உணர்வு (placebo effect) என்கிறார்கள். டாக்டர் ஹெக்டே தன்னுடைய முதல்புத்தகத்தில் கடவுள் என்ற கருத்தாக்கம் மனித மனம் உருவாக்கிய பிளேசிபோ சிகிச்சையாளர் என்றும் மனித மனம்என்பதும் மூளை என்பதும் ஒன்றல்ல, வெவ்வேறானவை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். மனக்கோளாறுகளுக்குவேதியியல் மருந்துகளை எடுத்துக்   கொள்வதால் மூளைக்கு பாதிப்பு ஏற்படுமே தவிர, மனநல பாதிப்பை அதுசரிசெய்துவிடாது என்கிறார் ஹெக்டே. புகைபிடிப்பது ஆளைக் கொல்லும் என்பதை நடைமுறையில் நிரூபித்துக் காட்டினார் டாக்டர் குமார். புற்றுநோயைஅவர் தைரியத்துடன் சந்தித்தார். நல்லதொரு ஆய்வின் உண்மையான முகமாக அவர் இருந்தார். மனதில் எழும் ஒருகேள்வியை வைத்துக் கொண்டு விடையைக் கண்டுபிடிக்க மனதிலிருந்து எவ்வளவு தூரம் விலகிச் செல்ல முடியுமோஅவ்வளவு தூரம் செல்வதுதான் உண்மையான அறிவியல். இதை வாழ்வியல் முறையாகக் கடைப்பிடித்த டாக்டர் குமார், தான் படித்த-பல ஆண்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்த உடற்கூறியல் துறைக்கு தன்னுடைய உடலைத் தானமாகக்கொடுத்துவிட்டு மறைந்தார் என்று தன் மாணவருக்கு புகழாரம் சூட்டி கட்டுரையை நிறைவு செய்கிறார் டாக்டர்ஹெக்டே.

ஏ.ஆா்.தாஹாவின் சிந்தனை அரும்புகள்

ஏ.ஆா்.தாஹாவின் சிந்தனை அரும்புகள் —————————————————— ஒலதிக்ருல்லாஹி அக்பர்……? —————————————————— கதிரவன் கண் விழிக்கும் நாட்களில் மிகச் சிறந்த நாள் ஜும்ஆ உடைய நாளாகும். கியாமத் ஏற்படுவதும் இந்நாளில் தான் என்பது கண்மணி நாயகம்(ஸல்) அவர்களின் அமுத மொழி யாகும். அப்படிப்பட்ட அந்த நாளை நாம் எப்படி பயன் படுத்துகிறோம்…?…

சுயமான சிந்தனையே ஆராய்ச்சியின் அடித்தளம்

அறிவியல் கதிர் சுயமான சிந்தனையே ஆராய்ச்சியின் அடித்தளம் பேராசிரியர் கே. ராஜு டாக்டர் பி.எம்.ஹெக்டே மருத்துவர்களில் மிகவும் வித்தியாசமானவர். அலோபதி மருத்துவர் ஆனாலும் மருந்துக் கம்பெனிகள் அடிக்கும் கொள்ளைக்கும் தேவையான அளவுக்கு மேல் மாத்திரைகளைப் பரிந்துரைப்பதற்கும் எதிராக கட்டுரைகள் எழுதி சகமருத்துவர்களின் கடுப்பைச் சம்பாதித்து வருபவர். தன்னுடைய மாணவர்…

அறிவியல் சிந்தனையின்உரத்த குரல்!

அறிவியல் சிந்தனையின்உரத்த குரல்! – புஷ்ப மித்ர பார்கவா(1928- 2017) ந.வினோத் குமார் ம னிதகுல முன்னேற்றத்தின் வரலாறு என்பது மாற்றுக் கருத்துகளின் வரலாறு என்பதில் தீவிர நம்பிக்கை கொண்டிருந்தவர் விஞ்ஞானி புஷ்ப பார்கவா. அறிவியல் சிந்தனைக்கு (சைன்டிஃபிக் டெம்பர்) எதிரான நடவடிக்கைகளை எதிர்த்துவந்த இந்தப் புரட்சிக் குரல்,…

சிந்தனை உறக்கம்!

சிந்தனை உறக்கம்! =================   இறைந்துண்டு வாழும் வாழ்க்கையானாலும்.. இறவாப் பசியென்பதனைவர்க்கும் இயற்கைதானே..!   சதைரத்தம் எலும்புடன் உடலென்றாலங்கே பசிமயக்கம் உறக்கமென்பதும் உடன்பிறப்பன்றோ?..   உறக்கத்துக்கு உரிமைக்குரல் தேவையில்லை.. ஊணுறக்க மில்லையேல் உயிர்களுமில்லையப்பா..!   மாலைச் சூரியனின் கருணையினால்.. மணற் படுக்கையிலென் கவலைமறந்துவிட..   வெட்டாந்தரை இடம்தான் நானுறங்கும்…

தியாகத் திருநாள் சிந்தனைகள்

தியாகத் திருநாள் சிந்தனைகள் மக்கா பயணம் இப்ராஹீம்(அலை) மூலம் விடுத்த அழைப்புக்கு “லப்பைக்” திருச்சொல்லால் லட்சக் கணக்கானோர் ஒப்பிலா னில்லத்தில் ஓதும் மறுமொழி இப்புவி யெங்குமே ஈர்க்கும் கஃபா: சாந்தம் பொழிய சமத்துவம் காணவே காந்தமாய் ஈர்க்கும் கருவான பள்ளி துருவான பாவம் துடைக்கும் பணிகள் இரும்பு மனமே…

இந்திய விடுதலை நாள் சிந்தனைகள்

இந்திய விடுதலை நாள் சிந்தனைகள் (கவிதை)   பலமுடன் கூடியே பிரிட்டனின் ஆட்சி விலக்கிய வேளையை விடுதலை நாளாய் நலமுடன் பாடியே நினைவினில் ஏந்தி வளமுடன் வாழவே வழுத்துவோம் இன்றே! உயிரினைத் துச்சமாய் உணர்ந்ததால் தியாகப் பயிரினால் அச்சமில் பரதமும் கிடைத்த முயற்சியின் உச்சமாய் முழுவதும் நினைப்போம் கயிற்றினில்…

உங்கள் சிந்தனைக்கு சில துளிகள் …

உங்கள் சிந்தனைக்கு சில துளிகள் … அன்புடையீர் ! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 1. ஆட்டோ, கார், பஸ், ரயில்களில் பிரயாணம் செய்யும் போது குடும்ப விஷயங்கள் போன்ற எந்த விஷயங்களையும் பேசாதீர்கள். 2. இரவிலோ, பகலிலோ தூங்க போகுமுன் வீட்டின் முன்கதவு, பின்கதவு, மாடி, கதவு சரியாக…

சமூக ஓட்டைகளை சிந்தனையால் மூடுவோம்…..

சமூக ஓட்டைகளை சிந்தனையால் மூடுவோம்.. உலகில் உயிர்கள் தோன்றி கோடானக் கோடி வருட அளவைக் கடந்து அமர்ந்துகொண்டும், வெறும் தற்போது நமக்கு அறியக் கிடைத்துள்ள இந்த ஈராயிரம் மூவாயிரம் ஆண்டுகளை மட்டுமே அதிகமாக கையிலெடுத்துக்கொண்டு, இன்றைய வாழ்க்கையை அளவிட்டுக்கொண்டு, நாளைய வாழ்விற்கான தீர்மானங்களை தேடிக்கொண்டு, முடிச்சவிழ்க்காமலே பல சிக்கல்களின்…