உங்கள் சிந்தனைக்கு சில துளிகள் …

Vinkmag ad

உங்கள் சிந்தனைக்கு சில துளிகள் …

அன்புடையீர் ! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

1. ஆட்டோ, கார், பஸ், ரயில்களில் பிரயாணம் செய்யும் போது குடும்ப விஷயங்கள் போன்ற எந்த விஷயங்களையும் பேசாதீர்கள்.

2. இரவிலோ, பகலிலோ தூங்க போகுமுன் வீட்டின் முன்கதவு, பின்கதவு, மாடி, கதவு சரியாக தாழ்போட்டு விட்டோமா என்று உறுதி செய்து கொள்ளுங்கள். மேலும் கேஸ் சிலிண்டர்கள் மூடி இருக்கிறதா என்று சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

3. பெண் பிள்ளைகளை மாலை 6-00 மணிக்கு மேல் வெளியே அனுப்புவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

4. ஆண் பிள்ளைகளை இரவு 9-00 மணிக்கு மேல் தக்க காரணம் இன்றி வெளியில் செல்ல அனுமதிக்காதீர்கள்.

5. மருத்துவமனை மற்றும் மருத்துவர்களிடம் போகும் போது கூடுதலாக நகை அணிந்து செல்லாதீர்கள்.

6. ஜவுளிக்கடை, நகைக்கடைகளுக்கு போகும் போது அவசியமற்ற பேச்சுக்களை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

7. விருந்தும் அவசியம், அதே சமயம் தவிர்த்துக் கொள்ளக்கூடிய மார்க்கத்திற்கு புறம்பான விருந்துகளை தவிர்த்துக்கொள்ளுதல் மிகவும் அவசியம்.

8. குழந்தைகளின் பரீட்சை நேரங்களிலாவது தொ(ல்)லைகாட்சியை நிறுத்தி விடுவதால் உங்கள் பிள்ளைகள் தலைசிறந்த மாணவ, மாணவிகளாக உருவாகலாம்.

9. வீட்டை பூட்டிவிட்டு வெளியே போக வேண்டியிருந்தால் அண்டை வீட்டாரிடம் தெரியப்படுத்திவிட்டுச் செல்வது சகோதரத்துவத்தை பலப்படுத்தவும் நம் வீட்டுக்கு பாதுகாப்பாகவும் அமையும்.

10. இரண்டு சக்கர வாகனங்களில் பெண்களை வெளியூர் அழைத்து செல்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

வெளியீடு :

அய்யம்பேட்டை –சக்கராப்பள்ளி முஸ்லிம் ஜமாத்சபை

News

Read Previous

உலக அரங்கில் ஒரு உண்மை வரலாறு !

Read Next

கிராம பகுதிகளில் இனிமேல் தண்ணீர் பிரச்னை இருக்காது அமைச்சர் சுந்தரராஜ் பேச்சு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *