ஏ.ஆா்.தாஹாவின் சிந்தனை அரும்புகள்

Vinkmag ad

ஏ.ஆா்.தாஹாவின்
சிந்தனை அரும்புகள்
————————————————————
சஞ்சலத்தில் ஆழ்த்தும் ஷைத்தான்
————————————————————
“ஏனோ தானோ வென்று
தொழுவோரை…….
எளிதில் ஷைத்தான்
கெடுக்கிறான்”……

“எத்தனை ரக்க அத்துகள்
தொழுதோ மென்ற
எண்ணிக்கையில் குழப்பம்
கொடுக்கிறான்”…….

ஆம்…உண்மைதான்.நான்கு ரக்கஅத்
தொழுகைகளில், எத்தனை ரக்கஅத் தொழுதோம் என்ற சிறிய சந்தேகம், தனியாகத் தொழும் போதும் சரி, ஜமாஅத்துடன் தொழும் போதும் சரி,
நமக்கு சில சமயம் எற்பட்டு விடுகிறது.
நமக்கு முன்னால் உள்ளவர் தலையை
உயர்த்தி விட்டாறாரா….? என்று ஓரக்
கண்ணால் நைசாகப் பார்ப்பதும் சர்வ சாதரணமாகி விட்டது.

இமாம் சில நேரம் தவறாக எழுந்தா
லோ, அல்லது தவறாக மறு ரக்கஅத்
திற்காக எழும்பாமல் உட்கார்ந்தாலோ
கூட, முன் ஸப்பில் நிற்பவர்கள் அதை
குரலால் எடுத்துக் காட்டாமல் வாய் மூடி மௌனிகளாகவே நிற்கிறர்.காரணம்..?
அவர்களுக்கே அது எத்தனையாவது ரக்கஅத்…? என்ற கவனமில்லை. ஆக
சில நேரங்களில் எல்லோருமே இதில்
மாட்டிக் கொள்ளத்தான் செய்கிறோம். இல்லை என்று யாரும் மறுக்க முடியாது

தக்பீர் கட்டியதும்…. முதலில் நம்மை ஷைத்தான் திசைத் திருப்புவது, வெளி
யில் கழற்றி விட்டு வந்த நமது செருப்பு பாதுகாப்பாக இருக்குமா…? என்பதில் ஆரம்பித்து வீட்டுக் கதவை ஒழுங்காக அடைத்தோமா? என்ற ஊசலாட்டத்தைத்
தந்து,பழைய கணக்கை எல்லாம் நம் கண் முன் கொண்டு வந்து, நம்மைக் குழப்பி,
உலக விசயங்களால் நம் உள்ளத்து ஓர்மையைக் கெடுக்கிறான். தொழுகை
யில் நிற்கும் போதுதான் நம் மனதில் பல விசயங்களை ஞாபக மூட்டுகிறான்.இதில்
மன ஓர்மையை கெடுப்பதில் முதலிடம்
வகிப்பது செல்போன்தான் என்றால்
அது மிகையாகாது

கணிணியில் (கம்ப்யூட்டரில்)
எத்தனையோ விசயங்களை
அழிக்க (Delete செய்ய) முடிந்த
நம்மால், தொழுகைக்குச் செல்லும் போது நமது உள்ளத்தில் அல்லாஹ்வைத் தவிர
மற்ற நினைவுகளை (Delete) அழித்து விட்டு தூய்மையான உள்ளத்தோடு,மன ஓர்மை யோடு தொழச் செல்ல முடிகிறதா……? என்றால், நிச்சயமாக இல்லை என்பது
தான் உண்மை.

வெளியூர் பயணத்தில் இருந்து நாம்
திரும்பும் போதே, நீ ரெம்ப சோா்வாய் இருக்கிறாய், சுப்ஹுக்கு அலாரம்
வைக்காதே, நீ வழமையாய் எழக் கூடியவன்தானே…. என்று ஷைத்தான்
நமக்கு தூபம் போடுகிறான்.நாமும்
சுப்ஹு தொழாமல் உறங்குகிறோம்.

மேல் அதிகாரி திட்டுவாரே என்பதால் வேலையில் ஓர்மை,

3 மணி நேரம் கண்ணை சிமிட்டாமல்,
சினிமா பார்ப்பதில் ஓர்மை

சீரியல்கள் பார்ப்பதில் ஓர்மை,

வாட்ஸ்அப்பில் மூழ்குவதில் ஓர்மை,

தனக்கு வர வேண்டிய பணத்தை
ஞாபகம் வைப்பதில் ஓர்மை

மற்ற எல்லா………விசயங்களிலும்
மனதில் ஓர்மை வருகிற நமக்கு…..
தொழுகையில் மட்டும் ஏனோ
மனதில் ஓர்மை வர மறுக்கிறது.

மேலும் கடமைக்குத் தொழச் செல்
கிறோமேயல்லாது….

கருத்தாய் தொழச் செல்லவில்லை
என்பதே நிஜம்.

இவைகளுக்கு என்ன காரணம்..?
நம் உள்ளம் முழுவதும் உலக ஆசா
பாசங்கள் நிறைந்து, மறுமை
யைப் பற்றிய சிந்தனை மறைந்து
அல்லாஹ்வைப் பற்றிய அச்சமும்,பயமும்
குறைந்து போனதே இதற்கு காரணம் என்றால் அது மிகையில்லை.

அன்பானவர்களே…….!
ஒளுவைப் பரிபூரணமாகச் செய்து,
முடிந்த அளவு இதய சுத்தியோடு, அமைதியாக, அடக்கமாக, மனதை
அலைப் பாய விடாமல், ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து தொழ முயற்சிப்போம்.

சஞ்சலத்தில் நமை ஆழ்த்தும் தீயோன் ஷைத்தானின் மாய வலையை
கிழித்து எறிவோம்.தொழுகையை
முழுமையாய் பரிபூரணமாக்குவோம்.

ஏக நாயனே……
எங்களின் அமல்களால்
எதுவுமில்லை.,நீ ஏவினாலன்றி
எமக்கு சுவனமில்லை.

எங்களின் மன ஓர்மையில்லா
பொடு போக்கான… அமல்களில்
குற்றம் கண்டு விடாதே ரஹ்மானே
எங்கள் மீது அருள் புரிவாயாக ஆமீன்.

ஏ.ஆா்.தாஹா(ART)18-02-2020

News

Read Previous

நா.நாகராஜன் முகநூல் கவிதைகள்

Read Next

‘வாழ்க்கையை எந்தக் கோணத்தில்”..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *