நா.நாகராஜன் முகநூல் கவிதைகள்

Vinkmag ad

நா.நாகராஜன் முகநூல் கவிதைகள்

 

  கௌரவப் பொய்கள்

 

 பொய்யை

கண்டுபிடித்தவன்

உண்மையிலேயே

புத்திசாலி.

அவன்

தயவால் தான்

நிறையப் பேர்

பிழைப்பு

இன்று 

நிஜத்தில் 

ஓடிக்கொண்டு 

இருக்கிறது.

—————————–

 

கஷ்டம்

 

இல்லாதவன் 

கஷ்டம்

இருப்பவனுக்கு

சொன்னால்

புரியாது

—————————

 

மரியாதை தேய்பிறை

 

பேத்தியின் கணவன்

எதிரில் வந்தால்

எழுந்து நிற்பார்

என் எழுபது 

வயது அம்மா.

 

பால் காய்ச்ச

சொல்லிவிட்டு 

பாப்பையா

பட்டிமன்றம்

பார்ப்பாள்

என் பத்தினி.

 

பிடித்ததை

செல்லில்

வாங்கி வரச்

சொல்லிவிட்டு

அம்மா வீட்டுக்கு

கிளம்புவாள்

மகனிடம் அவன்

காதலித்த அருமை

பெண்டாட்டி.

கரண்டி பிடித்த 

கை காரும்

ஓட்டுகையில் 

இதெல்லாம்

சாதாரணமப்பா

தான்.

—————————————

எங்கேயும் எப்போதும்

 

சிலருக்கு எதுவும்

பிரச்சனை

இல்லை.

பேச்சால் சமாளித்து

விடுவார்கள்.

 

எனக்கு எல்லாமே

ப்ராப்ளம் தான்.

அதையே நான்

சொன்னால் 

ஒத்துக்கொள்ள 

மாட்டார்கள்.

———————————

உழைப்பவன் கதை

 

தெய்வத்தைத்

தெருவில்

எறிந்துவிட்டு,

வெறும் தேரைக்

கொண்டாடும்

கூட்டம்தான்

நிறைய

இங்கே.

===================

அலுவலகம் மகள் தயவில்

 

பெத்ததுக்கு

தெரியவில்லை.

ஆனால் அவள்

பெத்ததுக்கு

தெரியுது.

(அம்மாவை டூ வீலரில் விடும் அவள் பெண்)

===========================

சனி , ஞாயிறு மாதக் கடைசி

 

துட்டு கிடைப்பது

மாதிரியே கஷ்டம்

எனக்கு வார

இறுதியில் நெட்டு

கிடைப்பதும்.

 

=====================

இன்றைய ஐ.ட்டி.கம்பெனி வேலை

 

ஐந்து நாள்

 கஷ்டம்

ரெண்டு நாள்

இஷ்டம்.

(லீவு)

 

=============================

சிங்கிள் மதர்.

 

அப்பன் இல்லா

வீடுகள் கூட

எழுந்துவிடும்

ஆனால் அம்மா

இல்லா வீடுகள்

சுனாமியில்

சிக்கிய துடுப்பு

இல்லா பாய்மரம்

மாதிரி சிக்கி

சீரழிந்து விடும்.

News

Read Previous

துடியன்ன இமைகள் காட்டுதி

Read Next

ஏ.ஆா்.தாஹாவின் சிந்தனை அரும்புகள்

Leave a Reply

Your email address will not be published.