ஏ.ஆா்.தாஹாவின் சிந்தனை அரும்புகள்

Vinkmag ad

ஏ.ஆா்.தாஹாவின்
சிந்தனை அரும்புகள்
——————————————————
ஒலதிக்ருல்லாஹி அக்பர்……?
——————————————————
கதிரவன் கண் விழிக்கும் நாட்களில்
மிகச் சிறந்த நாள் ஜும்ஆ உடைய
நாளாகும். கியாமத் ஏற்படுவதும்
இந்நாளில் தான் என்பது கண்மணி
நாயகம்(ஸல்) அவர்களின் அமுத மொழி யாகும். அப்படிப்பட்ட அந்த நாளை நாம்
எப்படி பயன் படுத்துகிறோம்…?

ஜும்ஆ நாளின் மேன்மை மறந்து
சும்மாப் பொழுதைப் போக்குறோம்
ஒலதிக்ருல்லாஹி அக்பர் எனும் போது
ஓடி வந்து தொழுகையில் இணைகிறோம்.

இதுதான் ஜும்ஆவை நாம்
பேணும் இன்றைய நமது நிலை.
(இதில் சிலருக்கு வெள்ளிக் கிழமை காலையின் சுப்ஹு தொழுகையே கேள்விக்குறி..? இதில் ஜும்ஆவுக்கு நேரத்தோடு வருவது என்பது…..?)
ஒட்டு மொத்தமாக எல்லோரையும் குறை
சொல்லி விட முடியாது.பெரும்பாலனோா் நேரத்தோடு வந்து அமர்கின்ற காட்சிகளை
யும் நாம் காணத்தான் செய்கிறோம்.

வெள்ளிக்கிழமை வந்து விட்டால்
நாம் ரெம்ப பிஸியாகி விடுகிறோம்.
மற்ற கிழமைகளில் இல்லாத வேலைகள் இந்த வெள்ளிக் கிழமைகளில் வந்து விடுகிறது.கோழி வாங்குறது, இறைச்சி வாங்குறது, மற்ற சாமான்கள் வாங்குறது, எல்லா வேலைகளும் அன்று மட்டும்
ஜரூராக நடக்கிறது.

அதற்கு பிறகு சின்னதொரு தூக்கம்.
மணி 12 ஐ நெருங்கும் போதுதான் ஜும்ஆவுக்குப் போகிற நினைப்பே
நம்மில் அனேகருக்கு வரும்.அதைத் தொடர்ந்து சேவிங், குளிப்பு இத்தியாதி, இத்தியாதி.ஆக நாம் ரெடியாகி பள்ளிக்கு வரும் போது ஜும்ஆ பயான் முடியும் தறுவாயில் இருக்கும்.

ஜும்ஆவிற்கு நேரத்தோடு பள்ளியில்
போய் அமர்பவர்களுக்கு, ஒட்டகம், மாடு,
ஆடு, கோழி, இறுதியாக முட்டை, இவை
களை குர்பானி கொடுத்த நன்மை
கிடைக்கும், இமாம் மிம்பரில் ஏறும் முன்பு
நாம் அங்கே சென்றால்தான் ஜும்ஆ
உடைய பலனை அடைய முடியும்,

அது போக நேரத்தே சென்றால்தான் அன்றைய ஜும்ஆக்கு வந்தவர்களின்
வருகை பதிவேட்டில் நமது பெயர்
இருக்கும், குத்பா ஆரம்பித்ததும் அமரர்
களும் குத்பாவை செவிமடுக்க அமர்ந்து விடுவார்கள், தாமதமாக வருபவர்களின் பெயர் அன்றைய பட்டியலில் இருக்காது
என்று என்னதான் பயான் செய்தாலும்..?

நீங்கள் என்ன வேண்டுமானாலும்
சொல்லுங்க நாங்க அப்படித்தான்
வருவோம்.ஆனால் நாங்கள் எப்படியும்
ஒலதிக்ருல்லாஹி அக்பரிலே வந்து
சோ்ந்து விடுவோம்.அது எங்களுக்கு ஒரு போதும் தவறாதுங்க… என்போா் சிலர்.

நட்பு ரீதியாக சில நண்பர்களை
ஏம்பா… கொஞ்சம் முன்னதாக ஜும்ஆ
வுக்கு வரக்கூடாதா.?என்றால்… உனக்கு ஒட்டகம் வேண்டுமானால் நீ நேரத்தோடு
போ. எங்களுக்கு ரெம்பவெல்லாம் ஆசையில்லப்பா…கோழி முட்டை அளவு நன்மை கிடைத்தால் போதும் என்று கிண்டலான பதில் வேறு.

ஜும்ஆ நாளில் வியாபாரத்தை
நிறுத்தி விட்டு விரைந்து பள்ளியை
நோக்கி வர, குர்ஆன் நம்மைப் பணிக்
கிறது.ஜும்ஆ நாளின் சிறப்புகளை
நம் பெருமானார் (ஸல்) அவர்களின்
பொன் மொழிகளும் எடுத்துரைக்
கிறது.ஆனாலும் நாம் அந்த நன்மை
களை இழந்தவர்களாகவே இருக்கி
றோம். தாமதமாகவே கடைகளை மூடி
விட்டு வருகிறோம்.

ஐவேளைத் தொழுகையை
ஒரு போதும் தொழாத,வெள்ளியன்று
ஜும்ஆத் தொழுகை மாத்திரமே
கடமை என்ற நினைப்பில், வாரத்
தொழுகை தொழ ஜும்ஆவுக்கு மட்டும்
வருபவர்களும் கூட, ஜும்ஆவுக்காவது நேரத்தோடு வருகிறார்களா? என்றால் கிடையாது. அவர்களும் சர்வ சாதாரண
மாக ஜும்ஆவில் வந்து இணைவது….?
ஒலதிக்ருல்லாஹி அக்பரில்தான்.

என்னத்தைச் சொல்ல…

ஆகவே! அன்பானவர்களே…..!!!
இமாம் மிம்பரில் ஏறும் முன்பே
பள்ளிக்குள் சென்றிட முயலனும்.
பள்ளி நிறைந்து வழியனும்.ஜும்ஆ
நாளின் மேன்மைகளை முழுமையாக
நாம் பெற்றிட, அந்த ஒரு நாளாவது நேரத்தோடு சென்று,விதித்ததைத்
தொழுது அமர்ந்து, வேண்டிய துஆக்கள் செய்து,பயானை நன்கு செவி மடுத்து, அல்லாஹ்வின் பேரருளை
அள்ளிக் கொள்வோமாக!.

இன்ஷா அல்லாஹ் நாளை ஜும்ஆ
உடைய நாள். நாம் எல்லோருமே
ஒட்டகத்திற்கு ஆசைப்படுவோமே.

ஏ.ஆா்.தாஹா( ART)08-11-2018

News

Read Previous

மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடவே கூடாத 8 உணவுகள்

Read Next

ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாத 28 பழங்கள், காய்கறிகள், உணவுகள்!

Leave a Reply

Your email address will not be published.