தியாகத் திருநாள் சிந்தனைகள்

Vinkmag ad

தியாகத் திருநாள் சிந்தனைகள்

மக்கா பயணம்
இப்ராஹீம்(அலை) மூலம் விடுத்த அழைப்புக்கு
“லப்பைக்” திருச்சொல்லால் லட்சக் கணக்கானோர்
ஒப்பிலா னில்லத்தில் ஓதும் மறுமொழி
இப்புவி யெங்குமே ஈர்க்கும்

கஃபா:
சாந்தம் பொழிய சமத்துவம் காணவே
காந்தமாய் ஈர்க்கும் கருவான பள்ளி
துருவான பாவம் துடைக்கும் பணிகள்
இரும்பு மனமே இலகு.

ஜம்ஜம் நீர்

குழந்தையாம் இஸ்மாயில்(அலை) குத்திய பாதம்
உழன்றதால் பாலையி லுண்டான நீரை
அருந்துவோ ரெண்ணம் அடையும் பலன்கள்
மருந்தாம் பிணிக்கு மகிழ்ந்து.

அரஃபாத்

மறுமையாம் தீர்ப்புநாள் மஹ்ஷரின் தோற்றம்
பொறுமையாய் நிற்கும் பொழுது அரங்கேற்றம்
நீண்ட இறைஞ்சுதல் நெஞசை உருக்கிட
மீண்டு வருவோம் மிளிர்ந்து.

ஹஜ்

பிறக்கும் நிலையில் பிழைக ளறியா(து)
பிறக்கும் குழந்தைபோல் பாவம் களைந்து
புடம்போட்டத் தங்கமாய் பூமியில் வாழ
திடமாக மாற்றும் திறன்,

உள்கிய்யா(குர்பானி):

அறுக்கத் துணிந்தார் அருமை மகனை
பொறுத்தே பணிந்தார் புதல்வர் மகிழ்வுடன்
ஐயம் களைந்த அடியாரின் அன்பினை
மெய்பிக்கச் செய்திடும் மாண்பு.

இறைச்சி இரத்த மெதுவுமே நம்மை
இறைவனும் வேண்டு மியல்பில் கிடையாது
அன்பு நிலைக்க அறமாய் வறியோர்க்கு
இன்பம் வழங்கவே ஈந்து.

(யாப்பிலக்கணம் : வெண்பா)

இன்பத்திருநாலள் வாழ்த்து
அன்புள்ளம் கோர்த்து




”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)
எனது வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com
மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com
                                       shaickkalam@yahoo.com
                                       kalaamkathir7@gmail.com
அலை பேசி: 00971-50-8351499

News

Read Previous

மனிதனுக்கு 98 % நோய்கள் தவறான உணவுப் பழக்கங்களால் தான் வருகிறது: இயற்கை மருத்துவர்

Read Next

கொள்கைச் சிற்பி அண்ணா

Leave a Reply

Your email address will not be published.