1. Home
  2. கோரிக்கை

Tag: கோரிக்கை

திருவரங்கம் ஸ்ரீரெங்கநாதர் கோயில் இடத்தைப் பாதுகாக்க கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவுக்கு உள்பட்ட திருவரங்கம் ஸ்ரீரெங்கநாதர் கோயிலுக்கு சொந்தமான இடத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராம மக்கள் சனிக்கிழமை ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவுக்கு உள்பட்ட திருவரங்கம் கிராமத்தின் தலைவர் சு. ரெங்கன், கிராமத்தில்…

நூலகத்தை அரசு கட்டடத்துக்கு மாற்றக் கோரிக்கை

முதுகுளத்தூரில் தனியார் கட்டடத்தில் இயங்கி வரும் நூலகத்தை அரசு கட்டடத்துக்கு மாற்றக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் 1957ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மைய நூலகம் தற்போது வரை தனியார் கட்டடத்தில் மாத வாடகையில் இயங்கி வருகிறது. இந்த நூலகத்துக்கு வாசகர்கள் 1 கி.மீ. தூரம் நடந்து செல்ல…

முதுகுளத்தூர் மக்கள் கோரிக்கை கிராமங்களுக்கு கூடுதலாக பஸ்கள் இயக்க வேண்டும்

முதுகுளத்தூர், : முதுகுளத்தூரில் உள்ள கிராமங்களுக்கு போதிய பஸ் வசதி இல்லாததால், ஆட்டோக்களில் அதிக பயணிகள் ஆபத்துடன் செல்ல வேண்டிய நிலை நிலவுகிறது. எனவே இக்கிராமங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முதுகுளத்தூரில் இருந்து காக்கூர், ஆதனக்குறிச்சி, புளியங்குடி உள்ளிட்ட வழியில் பல்வேறு…

சாத்தனூர் கண்மாய் கரையில் தடுப்புச்சுவர் கட்ட கோரிக்கை

முதுகுளத்தூர், :முதுகுளத்தூர் அருகேயுள்ள சா த்தனூர் கண்மாய் கரையில் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என  ஊராட்சி மன்ற தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். முதுகுளத்தூர் அருகேயுள்ள சாத்தனூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெ ற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். தாசில் தார்…

கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்க கோரிக்கை

முதுகுளத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரிந்து வரும், கௌரவ விரிவுரையாளர்கள் ஊதியம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி கட்டடத்தில் புதியதாக இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணி புரிந்து வரும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு 2014-ஆம் கல்வி…

புதிதாக மின் மாற்றிகள் அமைக்கக் கோரிக்கை

முதுகுளத்தூர் தொகுதியைச் சேர்ந்த முக்கிய ஊர்களில் புதிதாக மின் மாற்றிகள் அமைக்க வேண்டும் என்று தமிழக மின் வாரியத்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதனிடம் மு.முருகன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து முருகன் எம்எல்ஏ மேலும் கூறியதாவது: முதுகுளத்தூர் உதவிக்கோட்ட மின் வாரியத்தை 2 ஆகப்பிரித்து, திருவரங்கம் உதவிக்கோட்ட மின்…

மேலச்சீத்தை-முதுகுளத்தூர் சாலையை மேம்படுத்தித் தரக் கோரிக்கை

திருப்புல்லாணி, மேலச்சீத்தை கிராமத்திலிருந்து முதுகுளத்தூர் வரை செல்லும் சாலையை மேம்படுத்தி பேருந்துகள் செல்ல வசதி ஏற்படுத்தி தருமாறு கோவிலான் சாத்தான் கிராம பொதுமக்கள் ஆட்சியர் க.நந்தகுமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட திருஉத்தரகோசமங்கை அருகே உள்ளது கோவிலான் சாத்தான் கிராமம். இக்கிராமத்தில்…

முதுகுளத்தூர் பகுதியில் பருத்தி விளைச்சல் அமோகம் அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை

முதுகுளத்தூர்,: முதுகுளத்தூர் பகுதியில் பருத்தி விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பருத்தியை அரசே விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என  கோரிக்கை விடுத்துள்ளனர். முதுகுளத்தூர் பகுதியில் உள்ள காக்கூர், புளியங்குடி, வெலங்குளத்தூர், வென்னீர்வாய்கால், அலங்கனூர், திருவரங்கம், மீசல், கே.தேவர்புரம், குமாரக்குறிச்சி, உள்ளிட்ட பல கிராமங்களில்…

பேருந்து நிலையத்தில் இலவச கழிப்பறை அமைக்க கோரிக்கை

முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் இலவச கழிப்பறை அமைப்பதற்கு பேரூராட்சி நிர்வாகத்திடம் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். முதுகுளத்தூர் பேருந்து நிலையம் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் வந்து செல்லும் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படுவதோடு, தொற்றுநோய்கள் பரவுவதற்கும் வாய்ப்பாக உள்ளது. பொது இடத்தில்…

மனவளர்ச்சி குன்றிய மகனை காப்பாற்ற உதவுமாறு ஆட்சியரிடம் தாய் கோரிக்கை

மனவளர்ச்சி குன்றிய மகனை காப்பாற்றிட உதவுமாறு அவரது தாய் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமாரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே வீரம்பல் கிராமத்தில் வசிக்கும் தோமா ஏசடியான் மனைவி மேரிஜூலியட். இவர்களது மகன் கிர்லோஷ் குமார் (7) பிறவியிலேயே மனவளர்ச்சி குன்றிய…