1. Home
  2. ஒரு

Tag: ஒரு

நேருவின் ஒரு நாள்!

நேருவின் ஒரு நாள்!   ஜவாஹர்லால் நேரு இந்திய விடுதலைப் போராட்டத்தில் காந்தி தலைமையில் பல போராட்டங்களில் ஈடுபட்டு 3,256 நாட்கள் – ஏறத்தாழ ஒன்பதரை ஆண்டுகாலம் சிறையில் இருந்தார். 1947-ல் இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்ற அவர், 1964 -வரை 16 ஆண்டுகாலம் இந்தியாவை வளர்த்தெடுத்தார். பேராற்றல் மிக்க இந்த மனிதர் தன்னுடைய ஒரு நாளை எப்படிச் செலவிட்டார்? பத்திரிகைகளைப் படிப்பதற்கும், யோகா பயிற்சிக்கும்.. ஒரு நாளைக்கு சராசரியாக வரும் 500 கடிதங்களையும் தந்திகளையும் படிக்க.. வெளிநாட்டுத் தூதுவர்கள், அமைச்சரவை சகாக்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என்று முடிவில்லாமல் வந்துகொண்டே இருப்பவர்களைச் சந்திக்க..  மலைபோல் குவிந்திருக்கும் கோப்புகளைப் படிக்க..  உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உடனடியாக முடிவெடுக்க வேண்டிய விஷயங்கள் பலவற்றைக் கவனிக்க.. நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களின்போது மதியம் வரை அவையில்.. முக்கியமான விவாதங்களானால் முடியும் வரை அவையில்.. அமைச்சரவைக் கூட்டம், கட்சியின் கூட்டங்கள் .. -என தினமும் 16 மணி நேரம் இடைவெளி இல்லாமல் உழைத்தவர்.  இரவு 2 மணிக்குத் தூங்கச் சென்றாலும் காலை வழக்கமான நேரத்தில் எழுந்துவிடுபவர். நேருவின் இவ்வளவு அர்ப்பணிப்புமிக்க உழைப்புக்குக் காரணம் அவர்  மக்கள் மீது கொண்டிருந்த அன்பும், இந்தியாவின் எதிர்காலம் மீது கொண்டிருந்த கனவும்தான்! – ஆ.கோபண்ணா, ஆசிரியர், தேசிய முரசு. (மே 27: நேரு நினைவு தினம்)

இன்று ஒரு கதை…

இன்று  ஒரு கதை…   தன் அப்பாவுடன் கன்னியாகுமரி கடற்கரையோர கடைத் தெருக்களில் உற்சாகமாய் நடை போட்டுக் கொண்டிருந்தான் அந்தச் சிறுவன். ‘‘அப்பா… பாருங்கப்பா! சிப்பிகள்ல செய்திருக்கிற மயில், கிளி எல்லாமே அழகாயிருக்குப்பா!’’ ‘‘ஆமாம்பா!’’ ‘‘இந்தக் கடற்கரை காற்று, கன்னியாகுமரி எல்லாமே பிடிச்சிருக்குப்பா எனக்கு!’’ ‘‘அப்பா, ஏதாவது கதை சொல்லுங்க!’’ அப்பா ஆரம்பித்தார். ‘‘அது ஒரு சின்ன கதைதான். அப்ப நாங்க பள்ளிக்கூடம் படிச்சிட்டு இருந்தோம். அப்பாவுக்கு முன் பல்லு விழுந்து முளைச்சி வளர்ந்திருந்தது.’’ ‘‘அப்புறம்?’’ ‘‘அப்போ நாங்க எல்லாம் பள்ளிக்கூடம் முடிஞ்ச பிறகு கபடி விளையாடிட்டு இருந்தோம். நல்லா இருட்டிப் போச்சு. வீட்டுக்குப் போகவே இல்ல. போய் சர்பத் குடிக்கலாம்னு ஒரு பையன் சொன்னான். அப்பல்லாம் சர்பத் ஒரு டம்ளர் ஒரு ரூபாய்தான்.’’ ‘‘அப்புறம்?’’ ‘‘சர்பத் வாங்க நாங்க நாலு பேரு நிற்கும்போது கடைக்காரர் திரும்பி ஐஸ்கட்டி எடுத்தார். அப்போ ஒரு பையன் ரெண்டு கோல்டு ஸ்பாட் பாட்டிலை எடுத்து சாப்பாட்டு கூடைக்குள்ள போட்டு மேல துணி போட்டு மூடிட்டான்!’’ ‘‘கோல்டு ஸ்பாட்னா என்னப்பா?’’ ‘‘இப்ப சுர்ருன்னு ஆரஞ்ச் ட்ரிங்க் குடிக்கிறீங்க இல்ல… அது மாதிரி அப்ப கோல்டு ஸ்பாட்!’’ ‘‘சரி, சொல்லுங்க!’’ ‘‘திருடின உடனே எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். தூக்கிட்டு ஒரே ஓட்டமா ஒடினோம். எங்க பள்ளிக்கூடத்துல பெரிய வாகை மரம் இருக்கும். அதுக்குப் பின்னாடி போனா யாரும் கண்டுபிடிக்க முடியாது. அங்க போய் ஒளிஞ்சி நின்னுக்கிட்டோம். நாலு பேரு, ரெண்டு கோல்டு ஸ்பாட். சீக்கிரம் குடிக்க அவசரப் படுறோம்!’’ ‘‘அப்புறம்?’’ ‘‘கோல்ட் ஸ்பாட் திருடினோம். ஆனா அதை திறக்கிற ஓப்பனர் திருடலையே! இப்ப எப்படி அதைத் திறக்கிறதுங்கிற பிரச்னை வந்துச்சு. ஒருத்தன் கல்லை வைத்து தட்டப் போனான். தடுத்து விட்டோம். இன்னொருவன் பாட்டில் மூடியை பல்லால் கடித்து எடுக்க முயற்சி செய்தான். ஆவேசமான முயற்சி அது. அவன் கால் வாசி பல் உடைந்து விட்டது. அதுவும் முன் பல். பயத்துல அவன் கத்தினான்.’’ ‘‘அச்சச்சோ!’’ ‘‘உடனே எனக்குக் கோபம் வந்தது. இந்த பாட்டில் மூடியைத் திறக்க இவ்வளவு கஷ்டமான்னு, ஒரு உடைந்த மரக்கிளையில் மூடியின் ஓரத்தை வைத்து பாட்டிலை வேகமா இழுத்தேன். பாட்டில் படீரென உடைந்தது. உடைந்து என் கையில் குத்தியது. கை கிழிந்து சதை தொங்கியது. ரத்தம் பெருக்கெடுத்து தரையில் சொட்டிக் கொண்டே இருந்தது.’’ ‘‘ரொம்ப வலிச்சுதா அப்பா?’’ ‘‘சரியான வலி. நண்பர்கள் எல்லாரும் பதறிட்டாங்க. உடனே என்னை டாக்டர்கிட்ட கூட்டிட்டு போனாங்க. அவரு ‘இது எப்படி பட்டது’ன்னு விசாரிச்சாரு. நாங்க உண்மையை மறைச்சோம். எப்படியோ மறைச்சி கையில கட்டு போட்டுட்டு வீட்டுக்குப் போகலாம்னு கிளம்பும்போது, அங்க வாகை மரம் பக்கத்துல உடைஞ்சிருக்கிற கோல்டு ஸ்பாட் பாட்டில்களை மறைக்கலையேன்னு ஞாபகம் வந்துச்சு. உடனே நாலு பேரும் பள்ளிக்கூடத்துக்குப் போனோம். ரொம்ப இருட்டா இருந்தது. எங்க பள்ளிக்கூட மைதானம் பெரிசுங்கிறதால, இருட்டானா சில சமூக விரோதிகள் மது அருந்திட்டு இருப்பாங்க. நாங்க பாட்டில தேடிக் கண்டுபிடிச்சி மறைச்சிட்டு பார்த்ததும், அவங்க எங்களை நெருங்கிட்டாங்க. பிடிச்சி பணம் இருக்கான்னு கேட்டு மிரட்டினாங்க. நாங்க அழுதுக்கிட்டே எங்கள விட்டுருங்கன்னு கெஞ்சினோம்.’’ ‘‘ம்ம்ம்…’’ ‘‘எப்படியோ சமாளிச்சு வீடு வந்தா அங்க என் அப்பா, அம்மா கவலையோட காத்திருந்தாங்க. என் கையில பெரிய கட்டு இருக்கிறதை பார்த்து என் அப்பா, அதான் உன் தாத்தா அப்படியே மயங்கி விழுந்துட்டாரு. அப்புறம் தாத்தாவை மருத்துவமனைக்கு கூட்டிட்டு போய் இரவு அங்க தங்க வச்சி, இரவெல்லாம் தூங்காம மறுநாள் பள்ளிக்கூடம் போகும்போது எனக்கு தோணுச்சு.’’ ‘‘என்ன தோணுச்சு?’’ ‘‘கூல் ட்ரிங்ஸ் குடிக்கணும்னு கேட்டிருந்தா, என் அப்பா நிச்சயமா காசு தந்திருப்பாரு. பிறகு ஏன் இந்த திருட்டுப் புத்தி வந்தது? இப்படி திருடுறதுனால எவ்வளவு துன்பம் எனக்கும் நண்பர்களுக்கும் வந்ததுன்னு நினைச்சேன்.’’ ‘‘கையில இருக்கிற இந்தத் தழும்பு அந்த பாட்டில் குத்தினதாப்பா?’’ ‘‘ஆமா!’’ மகன் அப்பாவின் கைகளை தடவிப் பார்த்தான். நின்றவன், திடீரென்று வந்த பாதையிலேயே ஓடினான். அப்பா கத்தினார். ‘‘எங்க போறப்பா?’’…

ஒரு புத்தகம் என்ன செய்யும்?

ஒரு புத்தகம் என்ன செய்யும்? 1. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நமக்கு அதுவரை தெரியாத விடயங்கள் நமக்குத் தெரியவரும். 2. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நம்முடைய பொதுப்புத்தியில் அதுவரை தெரிந்த தகவல்கள், உண்மைகள், விழுமியங்கள், எல்லாவற்றைப் பற்றியும் கேள்விகள் உருவாகும். 3. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நமது அறிவுப்பரப்பு…

ஒரு கவிதைப் பூ

  ஞானத் தலைநகர் கீழக்கரை வள்ளல், கொடை நாயகர் பட்டத்து சுல்தான் முகம்மது வம்சத்தை சேர்ந்த சங்கைக்குரிய பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான் அவர்களை பாராட்டி வழங்கிய ஒரு கவிதைப் பூ   அஸ்ஸ்லாமு அலைக்கும், அன்பிற்குரியோரே ! அகமெல்லாம் நிறைந்த ஆற்றல் உடையோரே ! பட்டத்து சுல்தான் வம்சத்து…

ஒரு கோயில் குளத்தின் புகைப்படம் கிளர்த்தும் நினைவலைகள்…………….

ஐந்தாறு ஆண்டுகளுக்குமுன் எழுதிய கட்டுரை, 2016ல் நவீன விருட்சம் இலக்கிய சிற்றிதழின் நூறாவது இதழில் வெளியானது. உங்கள் வாசிப்புக்கு.. எஸ் வி வி   ஒரு கோயில் குளத்தின் புகைப்படம் கிளர்த்தும் நினைவலைகள்……………. எஸ் வி வேணுகோபாலன்  சமஸ்கிருதத்தில் புஷ்கரணி என்பது குளத்தைக் குறிக்கப் பயன்படுத்தும் சொல்…என் பாட்டிக்கு…

இனி ஒரு போதும்…………..

இனி ஒரு போதும்………….. எஸ் வி வேணுகோபாலன் ஒரு போர்க்காலத்தில் ஊரை விட்டு விரட்டப்படும் அதிர்ச்சி நேரம் போலிருந்தது அது….. எதையெல்லாம் எடுத்துக் கொள்வது  எதையெல்லாம் மறந்து வெளியேறுவது…   மழை நீர் திடுக்கென்று வாயில்படியைத் தொட்டு  வீட்டுக்குள் நுழைய அனுமதி கேட்ட அந்தப் பொழுதில்  அலறி அடித்துக் கொண்டு…