நேருவின் ஒரு நாள்!

Vinkmag ad

நேருவின் ஒரு நாள்!

 

ஜவாஹர்லால் நேரு இந்திய விடுதலைப் போராட்டத்தில் காந்தி தலைமையில் பல போராட்டங்களில் ஈடுபட்டு 3,256 நாட்கள் – ஏறத்தாழ ஒன்பதரை ஆண்டுகாலம் சிறையில் இருந்தார். 1947-ல் இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்ற அவர், 1964 -வரை 16 ஆண்டுகாலம் இந்தியாவை வளர்த்தெடுத்தார். பேராற்றல் மிக்க இந்த மனிதர் தன்னுடைய ஒரு நாளை எப்படிச் செலவிட்டார்?

பத்திரிகைகளைப் படிப்பதற்கும், யோகா பயிற்சிக்கும்.. ஒரு நாளைக்கு சராசரியாக வரும் 500 கடிதங்களையும் தந்திகளையும் படிக்க.. வெளிநாட்டுத் தூதுவர்கள், அமைச்சரவை சகாக்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என்று முடிவில்லாமல் வந்துகொண்டே இருப்பவர்களைச் சந்திக்க..  மலைபோல் குவிந்திருக்கும் கோப்புகளைப் படிக்க..  உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உடனடியாக முடிவெடுக்க வேண்டிய விஷயங்கள் பலவற்றைக் கவனிக்க.. நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களின்போது மதியம் வரை அவையில்.. முக்கியமான விவாதங்களானால் முடியும் வரை அவையில்.. அமைச்சரவைக் கூட்டம், கட்சியின் கூட்டங்கள் ..

-என தினமும் 16 மணி நேரம் இடைவெளி இல்லாமல் உழைத்தவர்.  இரவு 2 மணிக்குத் தூங்கச் சென்றாலும் காலை வழக்கமான நேரத்தில் எழுந்துவிடுபவர். நேருவின் இவ்வளவு அர்ப்பணிப்புமிக்க உழைப்புக்குக் காரணம் அவர்  மக்கள் மீது கொண்டிருந்த அன்பும், இந்தியாவின் எதிர்காலம் மீது கொண்டிருந்த கனவும்தான்!

– .கோபண்ணாஆசிரியர்தேசிய முரசு.

(மே 27: நேரு நினைவு தினம்)

News

Read Previous

ஈகை பெருநாள் வாழ்த்துச்செய்தி..!

Read Next

புத்தம்புது வாழ்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *