ஒரு கவிதைப் பூ

Vinkmag ad

 

ஞானத் தலைநகர் கீழக்கரை வள்ளல், கொடை நாயகர்

பட்டத்து சுல்தான் முகம்மது வம்சத்தை சேர்ந்த

சங்கைக்குரிய பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான் அவர்களை

பாராட்டி வழங்கிய

ஒரு கவிதைப் பூ

 

அஸ்ஸ்லாமு அலைக்கும்,

அன்பிற்குரியோரே !

அகமெல்லாம் நிறைந்த ஆற்றல் உடையோரே !

பட்டத்து சுல்தான் வம்சத்து பௌர்ணமியே !

பௌத்திர மாணிக்க பட்டிணத்தின் நன் முத்தே !

மட்டில்லாப் புகழின் மாண்பிற்குரியோரே !

மனிதம் நேசிக்கும் மகத்துவமுடையோரே !

பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான் உங்கள் முகவ்ரி,

எங்கள்

அகமெல்லாம் நிறைந்த அன்பின் முகவரி !

பசித்த வயிறுகளை பார்க்கின்ற பார்வைகளை

படைத்த ரப்பும் பரிவோடு பார்க்கின்றான் !

வணிகத்தில் ஈட்டும் லாபம் வரவிலும் சிறிதொதுக்கி

புனித நல் அமலுக்காகப் புன்னகையால் செலவழிக்கும்

இனியவருங்கள் ஈகை எந்நாளும் பேசப்படும். !

மனிதம் நேசிக்கவே நம்மாமறையும் போதிக்கிறது !

சங்கைக்குரியோரே ! உங்கள்

முன்னோர்கள் ஆலிம்கள் முதிர்ஞான நாதாக்கள் !

முன்னோர் வழிதானே பின் ஏரும் நடந்து வரும் !

கண்ணியத்தின் பிறப்பிடமே ! கல்பினிலே ஹக்கை வைத்து

எண்ணிச் செயல்படும் உங்கள் ஈகையினை போற்றுகிறோம் !

தென் காயல் பூபதிலே ! தீன் தோட்ட மாதுளையே !

மண்காயப் பொறுக்காத மழை வானப் புன்னகையே !

அல்லாஹ்வின் அருளோடும் அவன் வழங்கும் பரக்கத்தோடும்

எல்லா வளம் கண்டு இன்புற்று வாழியவே !

ஆமீன் ! ஆமின் !  யாரப்பில் ஆலமீன் !

 

ஆக்கம் :

தமிழ்மாமணி

ஹாஜி மு. ஹிதாயத்துல்லாஹ்,

இளையான்குடி

News

Read Previous

அய்மானை வாழ்த்துகிறேன்

Read Next

கவலைப்படாதே

Leave a Reply

Your email address will not be published.