அய்மானை வாழ்த்துகிறேன்

Vinkmag ad

அய்மானை வாழ்த்துகிறேன் 

’தமிழ்மாமணி’ கவிஞர் ஹாஜி மு. ஹிதாயத்துல்லாஹ்

பணி ஓய்வு, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, இளையான்குடி, தமிழ்நாடு

 

  • ஆண்டொன்று போனால் 

வயதொன்று போகும் 

இது நாம் அறிந்ததே !

 

  • இதே சமயம்,

ஆண்டுகள் வந்து 

போகப் போக ….

வலிமையும் பொலிவும்

கூடிக் கொண்டே போகிறது !

இது 

சமுதாய நலத் தொண்டு 

நிறுவனங்களுக்கானது !

 

  • அந்த வகையில் 

நமது அய்மான் சங்கத்துக்கு 

35 வயதாகிறது !

அல்ஹம்து லில்லாஹ் !

 

  • அய்மான் உருவாகிய

இத்தனை ஆண்டுகளில் 

அதன் கல்வி மற்றும் 

சமுதாய நலப் பணிகள் 

நம்மை அண்ணாந்து பார்க்க வைக்கிறது 

  • இன்னும் சிறப்பாகச் சொல்வதென்றால் 

அந்த இமயம் 

இதன் உயரத்திற்கு…………. இடுப்பளவே !

 

  • இந்த மண்ணில் 

வந்தோம்: வாழ்ந்தோம் 

மடிந்தோம் என்பது பெரிதல்ல; 

வாழும் காலத்தில் 

வல்ல அல்லாஹ்வுக்கும் 

அவனருமைத் தூதருக்கும் 

உவப்பான அமல்கள் 

எவ்வளவு செய்தோம் என்பதே

நாம் வாழ்ந்த வாழ்வின் 

கணக்கீடாகும் !

 

  • இந்த கணக்கீட்டின்படி 

நமது அய்மான் சங்கம் 

கூடுதல் மதிப்பெண்களே….. பெற்றிருக்கின்றது !

 

  • வரும் காலங்களிலும் 

நல்ல முத்திரை பதிக்க 

வாழ்த்துகிறேன் !

 

  • அய்மான் பணிகளுக்கு 

தோள் கொடுப்போம் ! 

ஆதரவற்றோருக்கு 

கரங் கொடுப்போம் !

எவரும் பகையில்லை 

ஏழைகளையும் நேசிப்போம் !

 

  • இதுவே நம் அய்மானின் கொள்கை முழக்கம் !

இதை 

அனைவருக்கும் எத்தி வைப்போம் 

அய்மான் வாழ்க ! வளமோடு !

ஆச்சரியக்குறியாய் நம்மோடு !

 

( கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் சிவகெங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்தவர். கவிஞர் மு. சண்முகமாக தனது வாழ்க்கையை தொடங்கியவர். இஸ்லாத்தின் மீது ஈர்ப்பின் காரணமாக 30 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாம் குறித்த நூல்களை, ஆக்கங்களை எழுதி மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர். வஹியாய் வந்த வசந்தம் என்ற நூலுக்காக கீழக்கரையில் 1990-ஆம் ஆண்டு நடந்த இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் பொற்கிழி வழங்கி கௌரவிக்கப்பட்டவர். புனித ஹஜ் பயணத்தையும் நிறைவேற்றியுள்ளார். )

News

Read Previous

பழந்தமிழர்களின் பொழுதுபோக்கு

Read Next

ஒரு கவிதைப் பூ

Leave a Reply

Your email address will not be published.