1. Home
  2. உள்ளுர்

Category: ஐ. மு. மு. ஜமாஅத்

முதுகுளத்தூரில் ஃபித்ரா விநியோகம்

முதுகுளத்தூரில் ஃபித்ரா விநியோகம் முதுகுளத்தூரில் இன்று 26.07.2014 சனிக்கிழமை ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் ரஹ்மானியா எத்தீம்கானாவில் ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது. ஃபித்ரா விநியோகத்திற்கான ஏற்பாடுகளை தேசிய நல்லாசிரியர் எஸ். அப்துல் காதர், பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹமது பஷீர் சேட் ஆலிம், ஏ.…

கத்தார் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

கத்தார் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி   தோஹா ( கத்தார் ) : கத்தார் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் இஃப்தார் எனும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி 25.07.2014 வெள்ளிக்கிழமை மாலை முதுவை இல்லத்தில் நடைபெற்றது. நோன்பு திறப்பு…

துபாயில் முதுவை ஜமாஅத் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி 2014

  துபாய் : துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் வருடாந்திர இஃப்தார் நிகழ்ச்சி மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு 08.07.2014 செவ்வாய்க்கிழமை மாலை கராமா பெங்களூர் எம்பயர் ரெஸ்டாரண்டில் நடைபெற்றது. துவக்கமாக அஜீஸுர் ரஹ்மான் இறைவசனங்களை ஓதினார். தலைவர் இப்னு சிக்கந்தர் தலைமை வகித்தார். கௌரவ…

முதுவைக் கவிஞர் மௌலவி உமர் ஜஹ்பர் பெயரில் சிறப்பிடம் பெறும் மாணாக்கர்களுக்குப் பரிசு

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் செயற்குழுக் கூட்டம் துபாய் : துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் செயற்குழுக் கூட்டம் 01.05.2014 வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் ஹெச். இப்னு சிக்கந்தர் தலைமை வகித்தார். ஜாவித் இறைவசனங்களை ஓதினார். கௌரவ…

அஜ்மானில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் கௌரவ ஆலோசகருக்கு வரவேற்பு

  அஜ்மான் : அஜ்மானில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் கௌரவ ஆலோசகர் ஹெச். ஹசன் அஹமதுவுக்கு வரவேற்பு நிகழ்ச்சி 05.04.2014 சனிக்கிழமை மாலை நடைபெற்றது. ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் ஹெச். இப்னு சிக்கந்தர் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் முதுவை ஹிதாயத் வரவேற்புரை நிகழ்த்தினார். கௌரவ…

புனித மதிநாவில் முதுவை வட்டார பிரமுகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

புனித மதிநா : புனித மதிநாவில் முதுகுளத்தூர் வட்டார பிரமுகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி 28.03.2014 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜ்மாஅத் சவுதி அரேபிய பிரதிநிதி ஏ. ஃபக்ருதீன் அலி அஹமது,  முதுவை அன்வர், தொட்டியபட்டி இத்ரிஸ்,  முதுவை ஆபித்,  தொட்டியபட்டி ஜபருல்லா, ஃபாரூக், மதுரை…

புனித மதிநா நகரில் அஜ்மான் பிரமுகருக்கு வரவேற்பு

புனித மதிநா :  புனித மதிநா நகரில் 01.04.2014 செவ்வாய்க்கிழமை உம்ரா பயணம் மேற்கொண்டுள்ள அஜ்மான் பிரமுகர் ஏ. அஹமத் இஸ்மத்துல்லா சேட்டுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சவுதி அரேபிய கிளையின் சார்பில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்ச்சி சவுதி அரேபிய பொறுப்பாளர் ஏ. ஃபக்ருதீன்…

துபை வருகை புரிந்த சவுதி அரேபிய ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பிரமுகருக்கு வரவேற்பு

துபை : துபை வருகை புரிந்த சவுதி அரேபிய ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பிரமுகர் ஏ. ஃபக்ருதீன் அலி அஹ்மதுவுக்கு 29.03.2014 சனிக்கிழமை மாலை வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்வில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் துணைத்தலைவர் ஏ. அஹமது இம்தாதுல்லா, பொதுச்செயலாளர் முதுவை ஹிதாயத், பொருளாளர் ஏ…

2004 : தேசிய நல்லாசிரியர் துபை வருகையின் போது

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் தேசிய நல்லாசிரியர் டாக்டர் எஸ். அப்துல் காதர் துபை வருகை புரிந்த போது ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகளால் வரவேற்பு அளிக்கப்பட்ட போது படத்தில் : ஜனாப் அமீர் சுல்தான், ஜனாப் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன்,…

2004 : முதுகுளத்தூரில் இஸ்லாமிய பயிற்சி மைய துவக்க விழா

2004 ஆம் ஆண்டு ஜுன் 04 ஆம் தேதி முதுகுளத்தூரில் நடைபெற்ற இஸ்லாமிய பயிற்சி மையத்தின் நிகழ்வு மலரும் நினைவாக இங்கு தரப்படுகிறது.