1. Home
  2. இலக்கியம்

Category: கட்டுரைகள்

மாமன் – மச்சான் உறவு காணும் மதுரை முஸ்லிம்கள்

மாமன் – மச்சான் உறவு காணும் மதுரை முஸ்லிம்கள் *********** மதம் எனக்குப் பெரிதுதான்… ஆனாலும் என் தேசம்… மண்… அதைவிடப் பெரியது – எஸ். அர்ஷியா முஸ்லிம்களை விட்டுவிட்டு மதுரையின் சிறப்பை எழுதுவதென்பது, சிற்பத்துக்குக் கண் திறக்காதது போல முழுமைபெறாமல் போய்விடும். முஸ்லிம்களும், அவர்களின் ஏற்ற இறங்கங்கள்…

பென்னிங்டன் நூலகம் – ஸ்ரீவில்லிபுத்தூர்

பென்னிங்டன் நூலகம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவில்லிபுத்தூரில் 135 ஆண்டுகள்ஸ பழமை வாய்ந்த நூலகம் ஒன்று உள்ளது. பென்னிங்டன் நூலகம் எனப் பெயர்பெற்ற இந்த நூலகம் தமிழகத்தில் உள்ள, பெரிய நூலகங்களில் 2-வது இடத்தை வகிக்கின்றது. 1875-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த பென்னிங்டன் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த…

குறைவாக சிரிப்போம்

குறைவாக சிரிப்போம்        அன்று முதல்,இன்று வரை திரைப்படங்களில், தொலைக்காட்சிகளில் ஒருவரை அடித்து, அவர் படும் துன்பங்களைக் கண்டு ரசிப்பது போன்ற நகைச்சுவை காட்சிகள் அமைக்கப்படுகின்றன.அல்லது ஒருவருடைய உடலமைப்பைக் கேலி செய்வது போன்ற நகைச்சுவை  காட்சிகள் அமைக்கப்படுகின்றன.    பொதுவாக ஒருவரை  அடிக்கும்போதோ அல்லது ஒருவரைக் கேலி செய்யும்…

அன்றும்… இன்றும்… என்றும்… அண்ணா

அன்றும்… இன்றும்… என்றும்… அண்ணா பேரறிஞர் அண்ணாவின் 112 வது பிறந்த நாளை ஒட்டி #Anna #AnnaBirthday | Arignar Anna Birthday | Sun News 1. அன்றும்… இன்றும்… என்றும்… அண்ணா – மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் https://youtu.be/mPY9rkmZ27s 2. பேச்சு தமிழ் பக்கம் வரவைத்தவர்…

அலட்சியத்தின் உச்சம்

அலட்சியத்தின் உச்சம் கொரோனா ஊரடங்கால்  உயிரிழந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து எந்தத் தகவலும் மத்திய அரசிடம் இல்லை. அதனால் இழப்பீடோ, நிவாரணமோ வழங்க வேண்டிய அவசியமும் எழவில்லை என்று மத்திய தொழிலாளர்துறை இணை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார் தெரிவித்துள்ளார். இது இந்திய மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனா காலத்தில் மோடி அரசின்  திட்டமிடாத முழு ஊரடங்கு அறிவிப்பால் தொழிலாளர்களின் காலடி ரத்தத்தைத் தார்ச்சாலைகளும் கண்ணீராக வடித்தன. சாலையின் குறுக்கும், நெடுக்குமாய்ச்  சாரைசாரையாக  உழைக்கும் பெண்கள் பச்சிளம் குழந்தையுடன்  பரிதவித்தனர்.  லட்சோபலட்சம்  புலம் பெயர் தொழிலாளர்கள் நடுரோட்டில்அலைந்து திரிந்த  அவலத்தைக் கண்டு நாடே கண்ணீர் சிந்தியது. அப்போதெல்லாம்   ஏசி அறையில் அமர்ந்து  இராமாயணம் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சருக்குத் தொழிலாளர்களின் துயரம் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். ஆனால் ஒட்டுமொத்த மோடி அரசுக்கே தெரியாது என்றால், மக்கள் நலனில் இவர்களுக்கு எவ்வளவு அக்கறை…

இனவாதம், இனத்தூய்மைவாதம்: நூரம்பெர்க் நகர நாசி கால அடையாளங்கள் சொல்லும் செய்திகள்!

source  – https://minnambalam.com/public/2020/09/15/11/Racism-News-of-Nurember-%20Nazi-signs இனவாதம், இனத்தூய்மைவாதம்: நூரம்பெர்க் நகர நாசி கால அடையாளங்கள் சொல்லும் செய்திகள்!  முனைவர் க.சுபாஷிணி     நூரம்பெர்க் நகரம் – இன்றைய ஜெர்மனியின் பவேரியா மாநிலத்தின் தலைநகரமான மூனிக் நகருக்கு அடுத்து முக்கியத்துவம் பெரும் ஒரு நகரம் இது. இன்று ஜெர்மனியின் மிக முக்கிய…

”நிதானத்தை இழக்காதீர்கள்…!

இன்றைய சிந்தனை ( 16.09.20 ) ………………………………………………….. ”நிதானத்தை இழக்காதீர்கள்…! ………………………………………………….. மனிதன் நிறைகளோடு இருந்தாலும், குறைகளை மட்டுமே மிகப் பெரிய பொருள் நிறைந்ததாகக் காண்கிறான். அவற்றுள் ஒன்று நிதானத்தை இழப்பது… நிதானத்தை இழப்பதினால் வாழ்க்கையில் பலவற்றை இழக்க வேண்டியிருக்கும். கோபத்தில் மனிதன் அறிவை இழந்துவிடுகிறான். அன்பை இழந்து…

தமிழர்கள் இலங்கையின் பூர்வீகக் குடிகள்

தமிழர்கள் இலங்கையின் பூர்வீகக் குடிகள் —  முனைவர்  ப.புஸ்பரட்ணம் யாழ் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரியர் தமிழர்கள் இலங்கையின் பூர்வீகக் குடிகள். தமிழ்மொழி இலங்கையின் தொன்மையான மொழி.  “சிங்கள அறிஞர்களே, சான்றுகளோடு குறிப்பிட்டுள்ளனர்.”  “தமிழ் மக்களை வ ழி நடத்துகின்ற தலைமைகளிடையே எமது வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டுமென்பதில்…

துணிந்து செய்

துணிந்து செய் — பூங்கோதை கனகராஜன் பணிந்து போகுதல் அன்புக்கே அடிபணிந்து போகுதல் யாருக்கும் அடிமைக்கெனில் தூக்கியெறிந்து துச்சமாக்கிட சொல்லிக் கொடுத்தானே அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே! பாரினில் எம் பாட்டன் பாரதியெனும் பெருங்கவி சொல்லி வைத்தான் ஓடி விளையாடும் பாப்பா விடம் வீரம் போதித்தவனாய் பாதகம் செய்பவரைக் கண்டால் நீ…

அரபு, பாரசீகச் சொற்கள் தமிழில் கலந்து வந்த வரலாறு

அரபு, பாரசீகச் சொற்கள் தமிழில் கலந்து வந்த வரலாறு – முனைவர் ஔவை ந.அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை, தமிழ்நாடு ================================================= சென்றவாரக் கட்டுரைக்கு எனக்கு பல நண்பர்கள் வாழ்த்துக் கடிதங்களை அனுப்பி எனக்குக் கூடுதலாக ஊக்கம் வழங்கினார்கள். எந்தையார் ஒளவை நடராசன் அவர்கள் போற்றும் ஆங்கிலப் பேராசிரியர் கும்பகோணம்…