பென்னிங்டன் நூலகம் – ஸ்ரீவில்லிபுத்தூர்

Vinkmag ad

பென்னிங்டன் நூலகம் – ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் 135 ஆண்டுகள்ஸ
பழமை வாய்ந்த நூலகம் ஒன்று உள்ளது. பென்னிங்டன் நூலகம் எனப் பெயர்பெற்ற இந்த நூலகம்
தமிழகத்தில் உள்ள,
பெரிய நூலகங்களில் 2-வது இடத்தை வகிக்கின்றது.

1875-ம்
ஆண்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த பென்னிங்டன் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த நூலகம்,
அதன்பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்ட அட்சியராக இருந்த
சரவணமுத்து, ஏ. ராமச்சந்திரராவ்,
டி. ராமஸ்வாமி
ஐயர், டி. கிருஷ்ணராவ், முத்து மற்றும்
முத்துச்சாமி ஆகியோரால் இணைந்து நடத்தப்பட்டது.

மேலும் விருதுநகர் மாவட்ட ஆட்சியரை தலைவராகவும், நகரில்
அறப்பணி அன்பர்களையும், நூலக வளர்ச்சிக்குப் பாடுபடும் மனப் பக்குவம் கொண்டவர்களையும்
உறுப்பினர்களாகச் சேர்த்தனர்

அவர்களில்
துணைத்தலைவர், செயலர், பொருளாளர் கொண்ட குழு
இந்நூலகத்தை மேலாண்மை செய்து வருகின்றது.
தற்போது மாவட்ட ஆட்சியரையும் சேர்த்து
14 உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்நூலகத்தில்,
1951-ம் ஆண்டிலிருந்து வெளிவந்த
தமிழக அரசிதழ்கள் மற்றும் அரசு ஆணைகள் பாதுகாக்கப்பட்டு
வருகின்றன.
தமிழில் 27800 புத்தகங்களும்,
ஆங்கிலத்தில் 25200 புத்தகங்களும் என மொத்தம் 53000
புத்தகங்கள் உள்ளன.

கலித்தொகை (1887),
த்ருவ சரித்திர கீர்த்தனை (1890),
இங்கித மாலை மூலமும்
உரையும் (1904),
தியாகராச லீலை (1905),
வள்ளலார் சாஸ்திரம் (1907),
திருமந்திரம் (1912) போன்ற அரிய தமிழ்ப்
புத்தகங்கள் உள்ளன.

மேலும் ‘பென்னி சைக்ளோபீடியா(1833)’
என்ற மிக அரிய வகை நூல் மொத்தம் 26 பாகங்களாக இங்கு
மட்டும்தான் உள்ளது.

இதுபோக பல அரிய தமிழ்
மற்றும் ஆங்கிலப் புத்தகங்கள் இங்கு ஏராளமாக உள்ளன.

நாள்தோறும் சராசரியாக 360 வாசகர்கள் நூலகத்துக்கு வந்து
பயன் பெறுகின்றனர்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 17 நாளிதழ்களும், மாத மற்றும் வார இதழ்கள்
தமிழில் 69-ம் வருகின்றன.

ஆங்கிலத்தில் மாத மற்றும் வார
இதழ்கள் 47-ம், ஆங்கிலத்தில் அறிவியல் தொடர்பு உடைய
இதழ்கள் 46-ம் வருகின்றன.

இந்த எண்ணிக்கை உயர்ந்துகொண்டே இருக்கின்றது.
1344 சதுர அடியில் சொந்தக்கட்டடத்தில் இயங்கிவருகின்றது.

ஆங்கிலப்பிரிவும்,
அரிய புத்தகங்கள்
அடங்கிய பிரிவும்,
பழைய இலக்கியங்களைத்
தேடுபவர்களுக்கும்,
போட்டித் தேர்வுக்கு ஆயத்தம் ஆவோருக்கும்
புதையலாக உள்ளது.

பழமையான அரிய புத்தகங்கள்
சிடியில் பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

கீழ்த்தளத்தில் மாத, வார இதழ்களும்,
தமிழ் நாவல்களும் வைக்கப்பட்டுள்ளன.
மேல்தளத்தில்
ஆங்கிலப்புத்தகங்களும், போட்டித்தேர்வுக்கான
புத்தகங்களும், அரிய வகைப் புத்தகங்களும் வைக்கப்பட்டுள்ளன.

நூலகத்தில் அமர்ந்து படிப்பதற்கு வசதியாக
ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனிப் பிரிவுகள்
சிறுவர்களுக்குத் தனிப்பிரிவு அமைத்து அவர்களே நூல்களை எடுத்துப் படிக்கும் விதத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
நல்லறிவையும்,
ஒருமைப்பாட்டினையும் வளர்க்கும் பொருட்டு வாரந்தோறும்
நீதிக்கதைகள், ஆன்மீகக்கதைகள், சுதந்திரப் போராட்டக்
காலக்கதைகள் ஆகியன தொலைக்காட்சியில் படமாகக்
காட்டப்படுகின்றன.

குடியரசுத்தலைவராக இருந்தபோது
டாக்டர். அப்துல்கலாம் அவர்கள் நூலகத்தைப் பார்வையிட்டு,
பார்வையாளர்கள் பதிவேட்டில் நூலகத்தின் செயல்பாடுகள்
மிக நன்றாக இருப்பதாக தன் கைப்பட எழுதியுள்ளார்.

இதுபோல, திரு.தென்கச்சி சுவாமிநாதன், திரு. வேலுக்குடி
கிருஷ்ணன் மற்றும் பலர் இந்நூலகத்திற்கு வ வருகை தந்து
நூலகத்தைப் பற்றி தங்கள் கருத்துக்களை தங்கள் கைப்படப்
பதிந்துள்ளனர்.
உயர்நீதிமன்ற
நீதிபதிகள் உள்ளிட்ட பலர் இன்றும் வருகின்றனர்.

இவ்வளவு பெருமை மிக்க இந்த நூலகத்திற்கு
எனது கல்லூரி நண்பர்
பெரிதினும் பெரிது கேள் என்னும் மகத்தான புத்தகத்தை வளரும் தலைமுறைக்குத் தந்துள்ள
திருச்சி சரக ரயில்வே காவல் கண்காணிப்பாளர் முனைவர்
T. செந்தில்குமார் அவர்களோடு கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றேன்.

வழக்கு உரைஞர்
லெட்சுமி நாராயணன்
இராஜபாளையம்

News

Read Previous

துபாய் கராமாவில் தமிழக மருத்துவர்

Read Next

மாமன் – மச்சான் உறவு காணும் மதுரை முஸ்லிம்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *