இராமநாதபுரம்

அரசுக்கல்லூரி என்.எஸ்.எஸ் சார்பில் போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

அரசுக்கல்லூரி என்.எஸ்.எஸ் சார்பில் போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் கடலாடி அரசுக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம்(என்.எஸ்.எஸ்)சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.இப்பேரணிக்கு கடலாடிஅரசுக்கல்லூரி முதல்வர் விமலா (பொ) தலைமை தாங்கினார்.கணினி அறிவியல் துறைத்தலைவர் அன்னதாசன் முன்னிலை வகித்தார்.சாயல்குடி பேரூந்து நிலையத்தில் இருந்து தொடங்கிய இப்பேரணியை சாயல்குடி காவல்நிலைய சார்பு ஆய்வாளர் உக்கிரபாண்டியன் தொடங்கிவைத்தார்.சாயல்குடி பேரூந்து நிலையத்தில் இருந்து தொடங்கிய பேரணியானது மாணவர்கள் போதை தடுப்பு குறித்த குடிபோதையில் குடும்பத்தை இழக்காதீர்,உடலை உருக்கி உயிரைக்குடிக்கும் கொடியஎதிரி,மேதையையும் அழிக்கும் போதையை ஒழிப்போம் என எழுதப்பட்ட வாசகம் அடங்கிய பதாகைகளை கையில்பிடித்துக்கொண்டுஒலிபெருக்கியில்கோசங்கள் எழுப்பியவாறு மெயின்பஜார், சந்தைப்பேட்டை, கன்னியாகுமரி விலக்கு, மூக்கையூர் சந்திப்பு வழியாக சாயல்குடி அரசுமருத்துவமனையுடன் முடிவுற்றது.இதில் விரிவுரையாளர்கள் நீரா.பொன்முத்து,கலாதேவி மற்றும் மாணவமாணவிகள் கலந்துகொண்டனர்.இறுதியாக கடலாடி அரசுக்கல்லூரி என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் விரிவுரையாளர் கலையரசன் நன்றி கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button