இராமநாதபுரம்
பொதுமக்களுடன் காவல் துறையினர் கலந்துரையாடல்

இராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் துறையின் சமூக அக்கறை மற்றும் மக்களுடன் நேரடி தொடர்பை நிலைநாட்டும் வகையில், “உங்கள் ஊரில் உங்கள் எஸ்” என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் இராமநாதபுரம் உட்கோட்டம், புத்தேந்தல் கிராமத்தை நேரில் பார்வையிட்டு, அங்குள்ள பொதுமக்கள், முக்கிய தலைவர்கள் மற்றும் இளைஞர்களுடன் கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பின் போது, அக்கிராம பகுதிகளில் நிலவும் சமூக சூழ்நிலை, பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் குறைகளை கவனமாக கேட்டு, அவற்றின் தீர்வுக்கான வழிமுறைகள் குறித்து பரிசீலனை செய்து, சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு தேவையான வழிகாட்டு ஆலோசனைகளை வழங்கினார்.





