தமிழக வெற்றிக் கழகத்தின் இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பில் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பில் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் சொல்லுக்கிணங்க,தமிழக வெற்றிக் கழகம் பொதுச்செயலாளர் ஆனந்த் வழிகாட்டுதலின்படி, கிழக்கு மாவட்ட கழக செயலாளர் மலர்விழி ஜெயபாலா தலைமையில், இராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட திருப்புல்லாணி கிழக்கு ஒன்றியம் செயலாளர் சிவபிரகாஷ் ஏற்பாட்டில் முத்துப்பேட்டை மில்ட்டன் மஹாலில் கழகத்தின் பல்வேறு வளர்ச்சி குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் 250’க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.இந்நிகழ்ச்சியில் திருப்புல்லாணி கிழக்கு ஒன்றிய இணைச் செயலாளர் ஹபிபுல்லா , துணைச் செயலாளர் பாலா முருகன், சீதா, ஒன்றிய செயற்குழு உறுப்பினர் சதீஷ், கோபால், சச்சின்,அருணாச்சலம், பூமாதேவி , ஆனந்தி, அகில் சுல்தான் , இன்சுதீன் , சிவா, சக்திபாண்டி மற்றும் அனைத்து ஒன்றிய கிளை நிர்வாகிகள் ஜெனித், கோபி, பழனிசெல்வன்,பாசித், பசுமலை, விஸ்வநாதன், சகுந்தலா, முகேஷ் , அன்புச்செல்வன், மகளிர் அணி சர்மிளா மற்றும் நிர்வாகிகள்.மாவட்ட இணைச் செயலாளர் நைனா முகம்மது, மாவட்ட பொருளாளர் சண்முகநாதன் , மாவட்டத் துணைச் செயலாளர் பாண்டி முனீஸ்வரி,மாவட்ட இளைஞர் அணி தளபதி தமீம் மற்றும் நிர்வாகிகள், மாவட்ட தொண்டரணி ஜில்லா கார்த்திக், சுகுமார், இராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் நிசாத், ராமநாதபுரம் ஒன்றிய இணைச் செயலாளர் அல் அகமது , திருப்புல்லாணி மேற்கு ஒன்றிய இணைச் செயலாளர் பகவத்சிங், துணைச் செயலாளர் முனியசாமி, கீழக்கரை நகர் முகமது ஜலால் , சதாம் உசேன், கீழக்கரை நகர் பொருளாளர் முகமது நிசார், தகவல் தொழில்நுட்ப அணி மில்ட்டன், தயா, பிரதீப் மற்றும் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்வின் இறுதியாக ஒன்றிய செயற்குழு உறுப்பினர் சச்சின் பிரபாகரன் நன்றியுரை கூறினார்.




