General News

துபாய் தமிழ்ச் சங்கம் நடத்திய குடும்ப சங்கமம்

துபாய் : துபாய் தமிழ்ச் சங்கம் தனது மார்ச் மாத நிகழ்வினை குடும்ப சங்கமமாக 30.03.2012 வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரை துபாய் மம்சார் பூங்காவில் பல்வேறு போட்டிகளுடன் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

காலை எட்டு மணிக்கு துவங்கிய குடும்ப சங்கமத்தின் துவக்கமாக பொருளாளர் கீதாகிருஷ்ணனிடம் தங்களது வருகையினை பதிவு செய்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என தனித்தனிப் பிரிவாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

பின்னர் மதியம் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி பிரிவாக அமைக்கப்பட்டு பாட்டுக்குப் பாட்டு போட்டி நடத்தப்பட்டது.

புதிய உறுப்பினர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

சிறப்பு விருந்தினராக தமிழ்த் தொலைக்காட்சி நடிகர் அப்ஸர் பாபு கலந்து கொண்டு குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார். நடிகர் அப்ஸர் பாபுவிற்கு துபாய் தமிழ்ச் சங்க நிறுவனப் புரவலர் ஏ. முஹம்மது தாஹா மற்றும் பொதுச்செயலாளர் ஜெகநாதன் நினைவுப் பரிசினை வழங்கினர்.

போட்டிகளை மீரா கிரிவாசன், சந்திரா கீதாகிருஷ்ணன், பிரியா உள்ளிட்ட குழுவினர் ஒருங்கிணைப்பு செய்து நடத்தினர். மாலையில் தேநீர் மற்றும் மசாலா வடை வழங்கப்பட்டது.

தமிழ்ச் சங்க அங்கத்தினர்கள் குடும்ப நிகழ்வினை மிகவும் மகிழ்வுடன் கழித்து பிரியா விடைபெற்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button