இராமநாதபுரம்

அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம்

அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஏப்ரல் 22 ஆம் தேதி வட்ட அளவில் வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம், ஏப்ரல் 23 ஆம் தேதி கோட்ட அளவில் வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம், ஏப்ரல் 24 ஆம் தேதி மாவட்ட அளவில் வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம், அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவர்களின் முக்கிய கோரிக்கைகளான 30 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி நிறைவேற்றிட வலியுறுத்தி மூன்று நாள் தொடர் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். இன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கடலாடி, முதுகுளத்தூர், வட்டத்தை சேர்ந்த அனைத்து நியாய விலை விற்பனையாளர்களும் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button