எஸ் டி பி ஐ கட்சி சார்பில் புதுமடத்தில் வக்ஃபு திருத்த சட்டத்தை கண்டித்து பொதுக்கூட்டம்

எஸ் டி பி ஐ கட்சி சார்பில் புதுமடத்தில் வக்ஃபு திருத்த சட்டத்தை கண்டித்து பொதுக்கூட்டம்.

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் புதுமடத்தில் மாபெரும் வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் தமிழ் மாநிலச் செயலாளர் பங்கேற்றார்
மாபெரும் பொதுக்கூட்டம் எஸ் டி பி ஐ கட்சியின் புதுமடம் கிராம பஞ்சாயத்து கமிட்டி தலைவர் சதாம் உசேன் தலைமையில் நடைபெற்றது
துணைத் தலைவர் AGM இப்ராஹிம் அனைவரையும் வரவேற்றார்
கட்சியின் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ் கான், மாவட்ட பொருளாளர் ஹசன் அலி, இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி தலைவர் பீர் மைதீன், மண்டபம் ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் புதுமடம் நிர்வாகிகள்,WIM மாவட்ட, கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்
SDPI கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் மௌலவி ஹசான் பைஜி அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்
ரமலான் அறிவு தேடல் பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது
இறுதியாக தொகுதி துணைத் தலைவர் முகமது ஜாபர்கான் நன்றியுரை நிகழ்த்தினார்.




