இராமநாதபுரம்

கீழக்கரை : அதாயி கல்வி நிறுவன நிகழ்ச்சி

அதாயி கல்விக் குழுமத்தின் சார்பில்
100 இளம் பட்ட வகுப்பு ஆலிம்களின்
அறிவுத் தேடலுக்கான கல்விச் சுற்றுலா – 2025

அதாயி கல்விக் குழுமத்தில் ஒவ்வொரு வருடமும் பயிலும் பட்ட வகுப்பு மாணவர்களை பன்முகத்தன்மை கொண்ட ஆளுமைகளாக உருவாக்க நிறுவன தலைவர் அஷ்ஷெய்க் அஃலா உஸ்தாத் முஹம்மது நிஸார் பாஜில் ஜமாலி ஹஜரத் கிப்லா அவர்கள் புது புது முயற்சிகளை நம் அதாயி கல்விக் குழுமம் சார்பாக முன்னெடுக்கிறார்கள்.

ஒவ்வொரு கிரமமாக, ஊராக, மாவட்டமாக மாணவர்கள் பிரிந்து சென்று ஹதீஸ் ஆய்வரங்கம், அகீதா ஆய்வரங்கம், ஃபிக்ஹ் மார்க்க சட்டங்கள், பொது சேவைகள், சுதந்திர போரில் முஸ்லிம்கள் வரலாறு, புர்தா ஷரீஃப் அரங்கேற்றம் என 500க்கும் மேற்பட்ட ஊர்களில் ஏற்கனவே நிகழ்த்தி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது,

அதன் வரிசையில் இந்த வருடம் பட்டம் பெற உள்ள 100 இளம் பட்ட வகுப்பு ஆலிம்கள் அனைத்து துறையிலும் சிறந்து விளங்கி பன்முக திறமை கொண்ட ஆளுமைகளாக உருவாக கல்விக் குழுமம் முன்னெடுத்துள்ள புதிய முயற்சி,

தென் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் உள்ள அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், ஆலிம் பெருமக்கள், கல்வியாளர்கள், சாதனையாளர்கள், சமூக ஆர்வலர்கள், சமூக முன்னேற்றத்திற்கு பாடுபடும் களப்பணியாளர்கள் என பலதரப்பட்ட ஆளுமைகளை நேரில் சந்தித்து கலந்துரையாட உள்ளனர்.

இதன் மூலம் மார்க்கம் கற்ற ஆலிம்களாக மட்டும் அல்லாமல் வாழ்வில் உயர்வை அடைந்து சாதனை படைக்க வேண்டும் என்பதே இக்கல்வி நிறுவனத்தின் நோக்கமாகும்.

கீழக்கரை அதாயி கல்வி நிறுவனத்தில் சிறப்பு விருந்தினராக பரமக்குடி கே.ஜே.இ.எம். மேல்நிலைப்பள்ளியின் முதுகலை ஆசிரியர் கே.ஏ. ஹிதாயத்துல்லா கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button