துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் கோல்டன் விசா பெற்றவருக்கு பாராட்டு

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் கோல்டன் விசா பெற்றவருக்கு பாராட்டு

துபாய் :
துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் அமீரக அரசின் பத்து ஆண்டுகளுக்கான கோல்டன் விசாவை சமூக மற்றும் ஊடகப் பணிகளுக்காக பெற்ற முதுவை ஹிதாயத்துக்கு பாராட்டு விழா நடந்தது.
இந்த விழாவுக்கு ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் செய்யது இப்ராஹிம் தலைமை வகித்தார்.
பொருளாளர் அஹமது அனஸ் வரவேற்புரை நிகழ்த்தினார்.
அமீரக இந்திய நலவாழ்வு பேரவையின் துணைத்தலைவர் பரமக்குடி ஏ.எஸ். இப்ராஹிம் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.
விழாவில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஜஹாங்கீர், அஹமது இம்தாதுல்லா, ஹபிப் திவான், ரியாஸ், கோயா, மீரான், அபுதாஹிர், தீனுல் இர்பான் அலி மற்றும் உத்தமபாளையம் செய்யது இப்ராஹிம், முஹம்மது பிச்சை உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிறைவாக முதுவை ஹிதாயத் ஏற்புரை நிகழ்த்தினார்.
நிகழ்வில் முதுவை ஜமாஅத்தினர் குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.




