General News

முதுகுளத்தூர்.காம் உதவியால் அமீரகத்தில் 25 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த பள்ளி மாணவர்கள்

ஷார்ஜா : முதுகுளத்தூர்.காம் உதவியால் அமீரகத்தின் கலாச்சாரத் தலைநகர் ஷார்ஜாவில் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சந்தித்து தங்கள் மகிழ்ச்சிப் பெருக்கினை வெளிப்படுத்திக் கொண்டனர்.

முதுகுளத்தூர் ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் ராஜா முஹம்மது அவர்களின் கடைசி மகன் ஆர். பக்கீர் முஹம்மது. தற்பொழுது சவுதி அரேபியாவின் ஜித்தாவில் உள்ள நிறுவனம் ஒன்றில் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

குமார் முதுகுளத்தூர் பள்ளிவாசல் பள்ளி ஆசிரியர்கள் அபரஞ்சி மற்றும் மறைந்த செல்லம் ஆகியோரின் கடைசி மகன். இவர் துபாய் ஈடிஏ மெல்கோ நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவர்கள் இருவரும் கடந்த 1985 ஆம் ஆண்டு பள்ளியில் படிக்கும் போது சந்தித்துக் கொண்டனர். அதன்பின் பணியின் நிமித்தம் ஊரை விட்டுச் சென்று விட்டனர்.

தற்பொழுது சவுதியில் இருந்து பணியின் நிமித்தம் அமீரகம் வருகை புரிந்த பக்கீர் முஹம்மது 23.09.2010 வியாழக்கிழமை இரவு 11 மணிக்கு தன்னுடன் பயின்ற பள்ளித்தோழரை 25 ஆண்டுகளுக்குப் பின்னர் அன்புப் பெருக்கினை வெளிப்படுத்திக் கொண்டனர்.

முதுகுளத்தூர்.காம் மேற்கொண்டு வரும் பணிகளை அவர்கள் பாராட்டினர்.

இதற்கான ஏற்பாடுகளை ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் முதுவை ஹிதாயத், செயற்குழு உறுப்பினர் அஸ்லம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button