முதுகுளத்தூர் செல்லியம்மன் கோவில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது

முதுகுளத்தூர் செல்லியம்மன் கோவில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது

முதுகுளத்தூர் ஆக 2.
முதுகுளத்தூர் தூரி செல்வநாயகபுரம் கிராமத்திற்கு பாத்தியப்பட்ட வடக்குவாசல் செல்லியம்மன் கோவில் 49-ம் ஆண்டு பூச் சொரிதல் விழாவையொட்டி 1ந் தேதி திருவிளக்கு பூஜை நடைபெற்றது விளக்குபூஜையில் 2008 குத்துவிளக்கு பூஜை யில்பெண்கள் திரளாக கலந்துகொண்டனர் அனைவருக்கு இரவு அன்னதானம் வழங்கப்பட்டன 2ந் தேதி மாணவ மாணவியரின் விளையாட்டு போட்டியும் 3 ந் தேதி திருக்குறள் போட்டியும்4ந் தேதி வளையல் அலங்காரத்தில் அம்மன் வீதி உலா5ந் தேதி அனைத்து மக்களுக்கும் பொது அன்னதானம் நடைபெறும்அதனைத் தொடர்ந்து தினம் அன்னதானம் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன 8ந் தேதி பூக்குழி மற்றும் முளைப்பாரி எடுத்துவவருதல் நிகழ்வு நடைபெறுகிறது 9ந் தேதி முளைப் பார் ஊரணியில் கரைக்கப்படும் விழாவின் அனைத்து ஏற்பாடுகளையும் தலைவர் முத்துப்பாண்டி செயலாளர் இராமலிங்கம் பொருளாளர் பெருமாள் செல்வநாயகபுரம் ஏ.சந்திரராஜ் பக்தசபை அறக்கட்டளை நிர்வாகிகள் எஸ்.இராமமூர்த்தி ஆசிரியர் ஆர். மாடசாமி கே. இளங்கோவன் உள்பட நீர்வாகிகள் செய்து வருகின்றனர்.



