இராமநாதபுரம்

கீழக்கரை நகர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கோரிக்கை மனு

கீழக்கரை நகர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கோரிக்கை மனு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (தெற்கு) மாவட்டம் கீழக்கரை கிளை சார்பில்
கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், குறிப்பாக பள்ளிக்கூடங்கள் வழிபாட்டுத் தலங்கள் மக்கள் புழங்கும் தெருப்பகுதிகளில், தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அதிக இடையூறுகளை எதிர்கொண்டு வருகின்றனர். தெருநாய்கள் கூட்டமாகத் திரிந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி செல்லும் சிறார்களும், முதியோர்களும் பெரும் அச்சத்துடன் தங்கள் தினசரி அலுவல்களை செய்கின்றனர். சில நேரங்களில் நாய்கள் வாகன ஓட்டிகளைத் துரத்தும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இது சாலை பாதுகாப்பிற்கும் மனித உடல்நலத்திற்கும் பெரிய ஆபத்தாகவே இருக்கிறது.

அதிகாலையில் தொழுகைக்காக செல்லும் முதியவர்கள் கடும் அச்சத்திலும், பள்ளிக்குச் சென்ற மாணவ மாணவிகள் வீடு விரும்பும் வரை பெற்றோர்கள் கடும் அச்சத்தில் உறைகின்றனர்

இந்த நிலைமையை மாற்றும் நோக்கில், சமீபத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், தெருநாய்களை பிடித்து, உரிய வகையில் அப்புறப்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க முடியும்.

எனவே, கீழக்கரை நகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் அச்சமின்றி மக்கள் அமைதியாக வாழும் சூழ்நிலையை உருவாக்க, நகராட்சி உடனடியாக துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை கிளை நிர்வாகிகள் சார்பில் கோரிக்கை மனு அளித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button