இராமநாதபுரம்

பட்டா மாற்றம் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது

பட்டா மாற்றம் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது

ராமநாதபுரம் .

இராமநாதபுரம் பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ. 5,000 லஞ்சம் பெற்ற புதுமடம் கிராம நிர்வாக அலுவலர் அனுராஜ்இராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் தாலுகாவைச் சேர்ந்த ஒரு நபர் (பெயர் தெரிவிக்க விரும்பவில்லை) தனது பெயருக்கு பட்டா மாறுதல் (Patta Name Transfer) செய்ய விண்ணப்பித்திருந்தார். இந்தப் பணியைச் செய்து தர புதுமடம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் அனுராஜ் (வயது 36) என்பவர் ரூ. 5,000 லஞ்சம் கோரியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத மனுதாரர் இது குறித்து இராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் அறிவுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய பணம் ரூ. 5,000-ஐ கிராம நிர்வாக அலுவலர் அனுராஜிடம் கொடுக்கும் போது, அவர் பணத்தைப் பெற்றுக்கொண்டார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை (08.02.2026) கையும் களவுமாக பிடித்தனர்.
அவரிடமிருந்து லஞ்சப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் அவர் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button