கீழக்கரை பள்ளியில் முப்பெரும் விழா!!

கீழக்கரை பள்ளியில் முப்பெரும் விழா!!

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப்பள்ளியில் ஏப்ரல்,28 அன்று தொழிலதிபர் பிலால் அப்துல்லா அவர்கள் புதிய தாளாளராக பதவி ஏற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் புதிய தலைமை ஆசிரியர் அருள் செல்வி வரவேற்புரை நிகழ்த்தினார். பட்டதாரி ஆசிரியர் முகம்மது ஜெய்னுதீன் (அறிவியல்) பணி நிறைவு விழா நிகழ்வும், தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு விழா என முப்பெரும் விழாவாக நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக வட்டார கல்வி அலுவலர் உஷாராணி,
கல்விக்குழு தலைவர் சேக் உசேன் பள்ளி கல்வி குழு உறுப்பினர்கள் முகம்மது ஜமாலுதீன், ஜமால், அஷ்ரப்,கல்வி நிர்வாக அலுவலர் செய்யது இப்ராஹிம் (ஆசிரியர்) மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு இந்நிகழ்வினை சிறப்பித்தனர்.
தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் ஶ்ரீ சாய், பூஜா, ஹேமசக்திகா ஆகிய மாணவர்களுக்கு ஒரு நபருக்கு 1000 வீதம் பள்ளித் தாளாளர் பிலால் அப்துல்லா பரிசுத்தொகை வழங்கி பாராட்டினார்
மேலும் கல்வி குழு உறுப்பினர்கள் இராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலர்( தொடக்கக் கல்வி) பிரின்ஸ் ஆரோக்கியராஜ் திருப்புல்லாணி வட்டார கல்வி அலுவலர் உஷாராணி வட்டார வளமைய மேற்பார்வையாளர் சேதுபதி ஆகியோர் பயிற்சி ஆசிரியர் சித்ராதேவி மற்றும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
வெற்றிக்கு உறுதுணையாய் இருந்த ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பள்ளி தாளாளர் பாராட்டி நன்றியினை தெரிவித்தார்.




