கல்விச்சீர்

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே நம்புதாளையில் உள்ள பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளிக்குத் தேவையான பொருட்களை கிராம மக்கள் கல்விச்சீராக வழங்கினர்.

நம்புதாளை மீனவர் சாலையிலிருந்து நாதஸ்வரம், மேள தாளத்துடன் தாங்கள் வாங்கிய பொருட்களை சரக்கு வாகனத்தில் ஏற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். பள்ளி கல்வித் துறை சார்பாக வட்டார கல்வி அலுவலர் ஆரோக்கியசாமி தலைமையில், வட்டார வள மைய மேற்பார்வையாளர் கார்த்திக் முன்னிலை வகித்தனர். பெற்றோர் ஆசிரிய கழக தலைவி தர்ஷினி, முன்னாள் பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் செய்யது யூசுப், பள்ளி மேலாண்மைக்குழு தலைவி சுமையா பானு மற்றும் உறுப்பினர்கள், தொண்டி மேற்கு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் கிருபாகரன், கிழக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லியோ ஜெரால்டு எமர்சன்,எம்.வி. பட்டிணம் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் பீட்டர் சகாய ராஜ், முகிழ்தகம் பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், காங்கிரஸ் மீனவர் அணி மாநில செயலாளர் முத்து ராக்கு மற்றும் அனைத்து கிராம தலைவர்கள், மாணவ,மாணவிகளின் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




