இராமநாதபுரம்முதுகுளத்தூர்

முத்தமிழ் அறக்கட்டளையின் 5 ஆம் ஆண்டு தொடக்க விழா

முத்தமிழ் அறக்கட்டளையின் 5 ஆம் ஆண்டு தொடக்க விழா


ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா வில் செயல்பட்டு வரும் முத்தமிழ் அறக்கட்டளையின் ஐந்தாம் ஆண்டு தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது
2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட முத்தமிழ் அறக்கட்டளை பல்வேறு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செய்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்திற்காக தையல் பயிற்சி ஊனமுற்றவர்களுக்கான நிதி உதவி வயதான முதியோர்களுக்கு வீட்டு மளிகை சாமான்கள், இளைஞருக்கான வேலை வாய்ப்பு முகாம், இலவச மருத்துவ முகாம் ஆகியவை செய்து வருகின்றனர்.


முத்தமிழ் அறக்கட்டளையின் சார்பாக முத்தமிழ் தர்ம சாலை எனும் அமைப்பை தோற்றுவித்து தினந்தோறும் வயதான முதியவர்கள் கண் தெரியாத மாற்றுத் திறனாளிகள் ஆகியோர்களுக்கு இலவச மதிய உணவு வழங்கி வருகின்றனர். மேலும் சிறந்த சமூக சேவைக்கான விருதும் பெற்றுள்ளனர்.


இந்நிகழ்ச்சியின் போது சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் வலமிருந்த இடமாக முருகேஸ்வரி பஞ்சவர்ணம் சபரிமலைநாதன் பாக்கிய லட்சுமி காளீஸ்வரி சிந்து வேம்புச்செல்வி அன்னமுத்து மருத வள்ளி ரேவதி ராணி மற்றும் வழிவிட்டாள் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button