கீழக்கரை மணீஷ்- ன் ஹோட்டல் பங்காளியின் ஐந்தாம் ஆண்டு துவக்க விழா

கீழக்கரை மணீஷ்- ன் ஹோட்டல் பங்காளியின் ஐந்தாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ஆட்டோ ஓட்டுனர்களை கௌரவிக்கும் நிகழ்வு

கீழக்கரை மணீஷ்-ன் ஹோட்டல் பங்காளியின் ஐந்தாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ஆட்டோ ஓட்டுனர்களை கௌரவிக்கும் நிகழ்வு பங்காளி ஹோட்டல் உரிமையாளர் துரை ஜெயமுருகன் தலையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கீழக்கரை ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் ஏர்வாடியைச் சார்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர், மேலும் ஆட்டோ ஓட்டுநர்களை கௌரவிக்கும் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கீழக்கரை காவல் நிலையத்தின் ஆய்வாளர் செந்தில் குமார்,சார்பு ஆய்வாளர்கள் சல்மோன், வீரகணேஷ், மற்றும் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் தில்லையேந்தல் ஊராட்சி மன்ற தலைவர்,நகர்மன்ற துணை தலைவர் ஹமீது சுல்தான், குகன் மாவட்ட செயலாளர் என் எம் எஸ், இராமநாதபுரம்,
ரோட்டரி துணை ஆளுநர் சுந்தரம், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராசிக்தீன்,இளங்கோவன் மேனேஜர் டிஎம்பி(ஓய்வு), மெரினா அசோசியேட்ஸ் சுல்தான் கபீர், கீழக்கரை ரோட்டரி சங்கத்தின் தலைவர் சிவா கார்த்திக், ஆன்டனி சதீஷ் செயலாளர் கீழக்கரை ரோட்டரி சங்கம்,திமுக மாவட்ட பிரதிநிதி தில்லை ரகுமான், மற்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்,
மேலும் கடை உரிமையாளர் துரை ஜெயமுருகன் கூறுகையில் உலகில் உழவுத்தொழிலுக்கு அடுத்து போக்குவரத்து தொழில் தான் இன்றியமையாத தொழில் ஆகும். இந்த போக்குவரத்து முதன்மையானவர்களும் தொழிலில் முக்கியமானவர்களும் யார் என்றால் ஓட்டுநர்கள் தான் என்பது சிறப்பு. நவீனமயமான வாழ்க்கை அமைப்பில் சமூக நல்வாழ்வு உருவாவதற்கும், பொருளாதார செழிப்பு அடைவதற்கும் மக்களுக்குத் தேவையான எளிதான, சிக்கனமான பொருள் பரிமாற்ற சேவைக்கும் மற்றும் அன்றாட நடமாட்டத்திற்கும் சமூக அர்ப்பணிப்பு கொண்ட ஓட்டுநர்(திறன் வல்லுநர்கள்) தான் இணைக்கும் சக்தியாக இருக்கின்றனர் என்று கூறினார்,




