General News

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் இஃப்தார் நிகழ்ச்சி

திருச்சி : திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி 07.08.2012 மாலை 5.30 மணிக்கு காஜாமியான் விடுதி அரங்கில் நடைபெற்றது.

கல்லூரி தாளாளர் முனைவர் காஜா நஜுமுதீன் தலைமை வகித்தார். முதல்வர் முனைவர் ஆர் காதர் முஹைதீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

சிறப்பு விருந்தினர்களாக தென்னக ரயில்வேயின் திருச்சி சரக துணை ரயில்வே மேலாளர் எஸ்.ஏ. அப்துல் ரஹ்மான், கி.ஆ.பெ. விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் ஏ. கார்த்திகேயன், தமிழ்நாடு மருத்துவ கழக தலைவர் டாக்டர் எம்.எஸ். அஷ்ரஃப், மருத்துவத்துறை உதவி இயக்குநர் டாக்டர் பி அப்துல் சமது, பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் பொறுப்பு வகிக்கும் முனைவர் எஸ். அருசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்வில் கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button