இராமநாதபுரம்
மீலாது விழா

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அனைத்து ஜமாஅத்துக்கள் ஒருங்கிணைந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்தும் மீலாது விழா மற்றும் மதரஸா மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது,இதில் கீழக்கரை அகமது தெரு அஸ்வான் மதரஸா மாணவர்கள் கிராத் மற்றும் தஜ்வீத் போட்டிகளில் பரிசுகளை பெற்றனர், அஸ்வான் ஆண்கள் மதரஸாவில் கிராத் போட்டியில் வென்றவர் இஸ்மாயில், தஜ்வீத் போட்டியில் வென்றவர் அப்துர் ரஹீம் , அஸ்வான் பெண்கள் மதாஸாவில் கிராத் போட்டியில் வென்றவர் சஜானா மர்யம்,தஜ்வீத் போட்டியில் வென்றவர் செய்யதா பாத்திமா ஆகிய மாணவ மாணவிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது, பரிசு பெற்ற மாணவ மாணவிகளை அஸ்வான் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.





