இராமநாதபுரம்
முற்றுகை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சிக்குட்பட்ட 14வது, 15 வது வார்டுகளான வெள்ளையாபுரம், மற்றும் சிங்க புலியாபட்டி ஆகிய பகுதிகளுக்கு பேரூராட்சி நிர்வாகம் எந்தவிதமான அடிப்படை வசதி செய்து கொடுக்கப்படவில்லை. நிதி முறையாக ஒதுக்கவில்லை என்று கூறி இதனை கண்டித்து இரு பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.




