இராமநாதபுரம்
ராமநாதபுரம்: அரசு பேருந்து நடத்துனர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு

ராமநாதபுரம்: அரசு பேருந்து நடத்துனர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட திண்டுக்கல் கிளையில் நடத்துனராக பணிபுரிந்து வந்த ராஜேந்திரன் (56), கரூரிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் பேருந்தில் பணிக்கு சென்றார். ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது, நடத்துனர் இருக்கையில் அமர்ந்திருந்த ராஜேந்திரனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவரது இருக்கையிலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




